வீரர்களின் ஏலம் என்றவுடன் நீங்கள் எதோ மாட்டு சந்தையில் மாடுகள் விற்பது போல் நடக்கும் என்று நினைத்தால் அதில் தவறேதுமில்லை. சிறிது Hitechஆக இருக்கும். அவ்வளவுதான். ஒரு மாதம் முன்னரே வீரர்களின் அடிப்படை விலை நிர்ணையிக்கப் பட்டுவிட்டது(மாட்டுச் சந்தேயேதான்.) முதற்கட்ட ஏலம்  jan 08-09 அன்று கோவாவில் நடந்தது.

சரி ஏலத்தில் நடந்த சில ஆச்சர்யமான, அதிசயத்தக்க நிகழ்வுகளை காண்போம். .

ஏலத்தின் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சற்றும் எதிர்பாராத விதமாக காம்பீர் 11 கோடிக்கு விலைபோனார். ஏலத்தில் முதலாக வந்ததால் இந்த விலை.(சனிக்கிழமை சுக்கிர திசை போலும்!!)இவர் உட்பட ரோஹிட், யுசுப், உத்தப்பா ஆகியோர் 2 மில்லியன் டாலருக்கு விலைபோனார்கள்.

நமது அணியான சென்னை சூப்பர் சிங்கங்கள், தனது வெற்றிக் கூட்டணியை மாற்ற விருப்பமில்லாமல், அனைத்து வீரர்களையும் தக்கவைக்க முயன்று வெற்றி பெற்றனர். மேலும் புதிதாக Hilfenhaus, Bravo, Faf dupleiss போன்ற சிலர் இணைந்துள்ளனர்.சென்னை மாப்பிள்ளை முரளிதரன்,பாலாஜி(தப்பிச்சோம் சாமி) தவிர அனைவரும் சென்னை திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றும் எதிர்பாராத விதமாக இர்பான் பதான் 9 கோடிக்கு விலை போனது ஆச்சர்யமானது என்றாலும், அவரின் மேல் உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.அண்ணன் யுசுப், தம்பி இர்பான் இனைந்து 18 கோடி பெற்றனர். ஜடேஜா, சாவ்லா, போத்தா ஆகியோர் தங்கள் திறமைக்கு பொருத்தமில்லாதா (அதிக)விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

பின்னர் நடந்ததுதான் சோகம். இந்தியாவை ஒரு அணியாக உருவாக்கி, உலகக்கோப்பை இறுதிக்கு அழைத்துச்சென்ற தாதா(என்று அழைக்கப்படும் கங்குலி) எந்த அணியையும் ஈர்க்கவில்லை(kkr உள்பட) என்பது மிகுந்த வருத்ததிற்குரியது. Kkr அணியினரே உங்களுக்கு இனி ரசிகர்கள் இல்லை, home advantage இல்லை. கங்குலி இல்லாத kkr அணி, அரசன் இல்லாத சிம்மாசானம் போல் பொலிவின்றி காணப்படுகிறது. தாதாவின் ரசிகர்கள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். முதல் இலக்காக ஷாருக்கான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அடுத்ததாக ஈடன் கார்டன் மைதானத்தில் ஆட்டம் நடக்க விட மாட்டோம் என்று வரிந்துக்கட்டிக்கோண்டு நிற்கிறார்கள். ஒரு வகையில் எதிர்ப்பார்த்தது என்றாலும் மிகவும் வருத்ததிற்குறியது.

மற்றபடி அடாவடி பேச்சுகள், மந்திரப் புன்னகை என்று ipl ஏலம் மிக உற்சாகமாக நடைப்பெற்றது. ஒரு நிலையில் ப்ரீத்தி மற்றும் சித்தார்த் மல்லையா வாய்த் தகறாரில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு அதிகாரி வந்து விலக்கி விட்டார்!!!.இவ்வாறு ஒருவழியாக ஏலம் முடிவிற்கு வந்ததது.

Arjun.S

படங்கள்:இணையம்.

Advertisements