தனுசு……2011….?
**************

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான், உங்களுக்கு ராசியான இடத்தில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், குருபார்வை தொடர்ந்து கிடைப்பதால், சனிக் கிரகத்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதுபோல குருவின் சஞ்சாரமும் ஆண்டு முழுதும் சிறப்பாகவே உள்ளது. ஆனால், ராகு;கேதுக்களின் சஞ்சாரம் ஜூன் 9ம் தேதிவரை உங்களுக்கு உகந்தது அல்ல.ஜூன் மாதத்துக்கு மேல் ராகு கேதுக்கள் உங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இனி பலன்களைப் பார்ப்போம். மாதக் கிரகங்களான செவ்வாய், சூர்யன், புதன், சுக்கிரன் முதலிய கிரகங்கள் ஆண்டுப் பலன்களைப் பெருமளவு மாற்றவல்லவை என்பதால்,சனியின் 10ம் இடத்து சஞ்சாரம் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. குருவின் 4ம் இடத்து சஞ்சாரம் மற்ற ராசிக்காரர்களுக்கு உகந்ததல்ல என்றாலும் ,அது உங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால், குரு பகவான் உங்களுக்கு ராசியாதிபதி மட்டுமல்ல. 4ம் இடத்தில் ஆட்சி பெற்றவரும்கூட. எனவே கெடுபலன்கள் அவ்வளவாக இருக்காது.தாயாரின் உடல் நலம் சிறப்படையும்.சிலருக்குத் தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கல்வி மேம்படும். இதுவரை கற்ற கல்வியினால்,கௌரவம் ,அந்தஸ்து உயரும்.வீடு, மனை யோகம் இருப்பதால், கிரகப் பிரவேசம் செய்யவும் கூடிவரும். பயணங்களில் எச்சரிக்கை அவசியம். சிறு சிறு விபத்துக்கள் ஏற்படும். வாகனங்கள் செலவு வைக்கும். இனி, மே மாதம் 8ம் தேதிக்கு மேல் இந்த ஆண்டு முடியும்வரை , இதுவரை இருந்துவந்த நிலைமை மாறி நற்பலன்களாக நிகழும்..புத்திரர்களின் கல்வியில் உள்ள தடை நீங்கும்.அவர்களது திருமணங்கள் தடைப்பட்டிருந்தால், தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வி, . வேலைவாய்ப்பு இவை கூடிவரும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். தொழில் ,வியாபாரம் சிறப்பாக இருக்கும்.எதிபார்த்த லாபம் கிடைக்கும்.அடகு வைத்த நகைகளை மீட்கலாம்.வாகனங்களால் நன்மை உண்டு.புத்திசாதுர்யத்துடன் செயல்படுவீர்கள்.புதிய தொழில் தொடங்கலாம். செல்வாக்கும் அந்தஸ்தும் மேலோங்கும். இதுவரை இருந்து வந்த நோய் நீங்கும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். தொல்லைகள் நீங்கி நன்மைகள் பெருகும். இனி மாதவாரியாகப் பார்த்தோமானால் ,ஜனவரி, மே,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர், அக்டோபர், நவம்பர் முதலிய மாதங்களில் கவனம் தேவை. நன்மைகளும் ,தீமைகளும் கலந்த ஆண்டு. கீழே தரப்பட்டுள்ள பரிகாரங்களைத் தவறாமல் கடைப்பிடித்து னாவந்தால்,இறைவனின் துணை கொண்டு இந்த ஆண்டை இனிதே கழிக்கலாம்.

பரிகாரம்
*********

சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி, ஞாயிறன்று துர்கைக்கு எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி வழிபாடு செய்து எல்லாவளமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்.!

**********************************************************

Advertisements