மகரம்….2011…எப்படி?
*****************

இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் குரு பகவான் சஞ்ரிக்கிறார். இது நல்லதல்ல .ஆனால், குரு பகவான் தன்னுடைய ஆட்சி வீட்டில் இருப்பதால், கேடு செய்ய வாய்ப்பு இல்லை. இதுவே மே 8ம் தேதிக்குப் பின், குரு பகவான் உங்க்ள் ராசிக்கு 4ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்த நிலை அல்ல. மற்ற கிரகங்களான ராகு, கேது இரண் டில் ராகு பகவான் சில நன்மைகளைச் செய்தாலும்கூட கேதுவால், சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் சஞ்சரிப்பதும் நல்லதல்ல. இப்படியாக எல்லாப் பெரிய கிரகங்களும் சேர்ந்து நம்மை ஒரு வழி பண்ணிவிடுமோ என்று பயப்பட வேண்டாம். ஏனெனில், மாதக்கிரகங்களான சுக்கிரன், செவ்வாய், சூர்யன், புதன் இவற்றின் சஞ்சாரங்கள், கெடு பலன்களை மாற்றித் தரும் சக்தி உள்ளது. இனி இந்த ஆண்டுக்கான பலன்களைக் காணலாம். .இந்த ஆண்டின் தொடக்கத்தில்,கேது பகவான் உடலத்தை மேம்படுத்துவார். உங்கள் எதிரிகளை அடக்குவார். சண்டை சச்சரவுகள் தீரும். நல்ல வருமானம் கிடைக்கும்.பழைய கடன்கள் அடைபடும். அதுபோல ஜூன் 9ம் தேதிக்குப் பின் ராகு பகவானாலும் சில நன்மைகள் ஏற்படும். அந்தஸ்தும் புகழும் ஓங்கும். சிலருக்கு எதிபாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு கௌரவ பட்டங்களும் பதவிகளும் கிடைக்கும். சகோதரர்களால் சிலருக்கு நன்மைகள் கிடைக்கும். மே மாதம் வரை கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். வீண் அலைச்சல்கள் இருக்கும். புத்திரர்களின் கவலைகளும் மருத்துவச் செலவுகளும் அதிகமாகும். சொத்துத் தகறாறுகள் ஏற்படும். இந்த ஆண்டின் மே மாதம் வரை 3ல் ஆட்சியாக இருக்கும் குரு பகவான் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் மன வலிமையைக் கொடுப்பார். வெளி நாட்டு வேலை வாய்ப்பைக் கொடுப்பர். ஆயினும் வீண்செலவுகள் அதிகமாகும். சிலரது குடும்பங்க்களில் சுபகாரியங்கள் நடக்கலாம். புத்திரர்களின் சுப காரியங்களில் உள்ள தடைகள் நீங்கி நன்றாக நடக்கும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பேச்சில் ஒருவித மன வலிமை தெரியும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் மேம்படும். தந்தை மேன்மை அடைவார். சிலருக்குத் திருமணம் நடக்கும். மே மாதத்துக்குப் பின் பல தொல்லைகள் வரும். சொந்தங்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பர்டும். யாருடனும் எதிலும் கலந்து கொள்ளாமல், ஒதுங்கியிருப்பீர்கள். விரக்தி வெளிப்படும். விரயச் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலம் கெடும். எல்லோரையும் பிரிந்து வாழும் நிலை வரும். வீடு, நிலங்களை விற்க வேண்டிவரும். கோர்ட் கேஸ்களூம் ,கௌரவக் குறைவும் ஏற்படும் கேஸ்களுக்குத் தீர்ப்புவந்தால் அது சாதகமாக வராது. வருமானம் குறையும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள். எதிர்பாராத கஷ்டங்கள்,எதிரிகளின் தொல்லைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது. கீழே வேலை செய்பவர்கள் பணிய மாட்டார்கள். மாதவாரியாகப் பார்க்கும்போது ஜனவரி,ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,செப்டம்பர்,மாதங்களில் கவனம் தேவை. நவம்பரில் சிலர் விபத்தில் சிக்கிக் கொள்ளவும் நேரலாம்.ஆனால், இறைவன் அருளால் எந்த கஷ்டமும் தீரும். கீழே தரப்பட்டுள்ள பரிகாரங்களைத் தவறாமல்செய்யவும்.

பரிகாரம்
*******

சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபமும், ஞாயிற்றுக்கிழமையில் துர்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கும் ,வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு பொன்னரளீப்பூ மாலைபோட்டு, கொண்டக்கடலை நைவேத்திமும் செய்தால் கஷ்டங்கள் தீரும். வாழ்க! …. வாழ்க!
*******************************************************

Advertisements