கும்பம்...2011?
*************

கும்பம் ராசி


நீங்கள் கண்ணியம் தவறாதவர்.இந்த ஆண்டு மே மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் உகந்த நிலை. அதன்பின் குரு 3ம் இடம் செல்வது நல்லதல்ல. ஆனால், அதற்காகக், கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இந்த வருடம்,ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை குருக்கிரகம் வக்ர கதி அடவதால் அச்சமயம் குரு பகவான் நற்பலன்களைக் கொடுப்பார்.அதுபோல ஜூன் 9ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் அமைந்த கேது பகவானின் சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும். ஆனால், 11ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு, நற்பலன்களைக் கொடுக்க மாட்டார். ஆனால், மே7ம் தேதிக்குப்பின் ராகு- கேதுக்கள் பலன்களை மாற்றித் தருவார்கள்.அதாவது ராகுவால் நற்பலன்களும் கேதுவால் கெடுதியும் நிகழும். மேலும் , இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், அது சாதகமானதல்ல.இருப்பினும் மே மாதம் வரை சனி, குருவின் பார்வையைப் பெறுவதால், மே மாதம் வரை தொல்லை இருக்காது. அதன் பிறகு கொஞ்சம் சிரமமான காலம்தான். ஆனால், அதற்காக அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் நான் பல முறை கூறியுள்ளபடி ஆண்டுக் கிரகங்களைவிட மாதக் கிரகங்களான சூர்யன், சுக்கிரன் புதன்,
செவ்வாய் முதலியவை ஆண்டுப் பலன்களை மாற்றியமைக்கும் சக்தி உடையவை.இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். மே 7ம் த்தேதிவரை குரு 2ம் இடத்தில் இருப்பதால், பணப்புழக்கம் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். எதிரிகள் வலுவிழந்து போவார்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ,ஒற்றுமையும் நிலவும்.புதிய நகைகள், ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவர்களுக்குக் கல்வியும், திருமணமாகாதவர்களுக்கு திருமணமும் நிகழும். குடும்பத்தில் பலவித சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு. வேலை வாய்ப்பும் ,வெளி நாடு செல்லும் யோகமும் கிடைக்கும். தொலைந்து போன பணம், நகை திரும்பக் கிடைக்கும். அடகு நகைகளை மீட்கலாம் .புதிய தொழில் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். வ்ழக்குகள் ஏதாவது நிலுவையில் இருந்தால், சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். மே 8ம் தேதிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறும். எடுத்த காரியங்கள் தோல்வியைச் சந்திக்கும். உடல் நலம் பாதிக்கப்படும். வீண்செலவுகள் அதிகமாகும். வருமானம் குறையும். குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் அதிகமாகும். வீட்டில் நிம்மதி அடியோடு தொலைந்து போகும். வீட்டைக் கொஞ்ச நாட்கள் பிரிந்திருக்க நேரும். நகைகள் காணாமல் போகவும் ,அவைகளை விற்கவும் நேரும்.உடல நலத்தில் கவனம் தேவை. கூட்டுத் தொழிலில் பார்ட்னரால் ஏமாற்றப்படுவீர்கள். அலுவலகத்தில் வேலப் பளு அதிகமாகும். எத்தனை உழைத்தாலும் மேலதிகரிகளிடம் நல்ல பெயர் வாங்க முடியாது. விரும்பாத இடமாறுதல் வந்து சேரும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிகளின் தொல்லைகள், அதிகரிக்கும். பல்வித நோய்கள் தாக்கும். தீய நண்பர்கள் வந்து சேர நேரிடும். எனவே மிகுந்த எசரிக்கையுடன் இருக்க வேண்டும். வீடு, நிலங்களைவிற்கவேண்டிய சூழ்னிலை உண்டாகும். செலவுகள், அலைச்சல்கள் அதிகமாகும். நிம்மதி இழந்து தூக்கம் கெடும். பணங்களில் விபத்துகள் நேரலாம். எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டால், தண்டம் கட்ட நேரும். கோர்ட், கேஸ் என்று அலைய்ய வேண்டி வரும். உடலிலும் சுறுசுறுப்பு குறையும் எனவே,இறைவனை வணங்கினால், துன்பங்கள் குறையும். இனி மாதவாரியாகப் பார்த்தோமானால், பிப்ரவரி, மார்ச்,ஏப்ரல்,ஜூன்,செப்டம்பர்,அக்டோபர் முதலிய மாதங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மனம் தளராமல், கடவுளை வேண்டியபடி கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து வந்தால் எவ்வித நிலைமையையும் சமாளிக்கும் வழியை அந்த ஆண்டவனே காட்டுவார்.


பரிகாரம்
*******


சனியன்று சனி பகவானுக்கு எள் தீபம், தட்சிணாமுர்த்திக்கு வியாழக்கிழமைகளில், பொன்னரளி மால், ஞாயிறுதோறும் வினாயகருக்கு அபிஷேகமும் செய்து வந்தால், துயரங்கள் விலகும். வாழ்க!....வாழ்க!

Advertisements