மீனம்...2011....எப்படி..?
*******************


இந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதிவரை குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். மே மாதம்7ம் தேதிக்குப்பின் உங்கள் ராசிக்கு 2ம் இடத்திற்கு குரு செல்வது மிகவும் உகந்த நிலை. அடுத்தபடியாக ஜூன் 9ம் தேதிவரை, ராகு கேது சஞ்சாரங்களில் கேதுவால், சில தீய பலன்கள் ஏற்பட்டாலும்கூட, ராகு பகவான் உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்வார். அதுபோல சனி பகவான் கண்ட சனியாக சஞ்சாரம் செய்வதால்,இந்த நிலை உங்களுக்குச் சாதகமான நிலை அல்ல. இருந்தாலும்கூட மே மாதம்வரை குருவின் பார்வைக்குக் கட்டுப்பட்டு இருப்பதால்,அதிகமான சோதனைகள் எதுவும் வராது. இருப்பினும்,ஆகஸ்ட் முதல் டிஸம்பர் வரை குரு பகவானின் வக்ர கதியில் அதிக பாதிப்புகள் ஏற்பட வழியுண்டு. ஏற்கனவே கூறியுள்ளபடி மாதக் கிரகங்களும் ஆண்டுக் கிரகங்களின் பலன்களை மாற்ற முடியும் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இனி இந்த ஆண்டில் ஆண்டுக் கிரகங்களால் ஏற்படப் போகும் பலன்களைப் பார்ப்போம். இந்த ஆண்டில், உங்களுக்கு மனதில் ஒரு தன்னம்பிக்கை ஏற்படும். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு இவை மேலோங்கும். பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். வசூலாகத கடன்கள் வசூலாகும். எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். மாண்வர்களுக்குக் கல்வியில் மேன்மை கிடைக்கும். புத்திரர்களின் திருமணங்கள் தடைப்பட்டிருந்தால், அது இப்போது சிறப்பாக நடைபெறும். வேலையின்றி இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ,இழந்து போன சொத்துக்கள் திரும்ப கைக்கு வரும். இதுவரை மனைவியை வாட்டி வதைத்து வந்த நோய் நீங்கும். புதிய நகை வாங்கவும், அடகு நகைகளை மீட்கவும் முடியும். பழைய பகைவர்கள் உங்கள்மீது இதுவரை கொண்டிருந்த பகையை மறந்து உங்களுடன் உறவு பாராட்டுவர். அலுவலக வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புத்திரர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் இவை சிறப்பாக நடைபெறும்.இதே நேரத்தில் கேதுவின் தீய பலன்களுக்கும் குறைவிருக்காது. தீய நண்பர்களின் சகவாசத்தில் சிலர் சிக்கி, அல்லலுறுவர் வயிறு சம்பந்தமான நோய் நீங்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும். வாகனங்களால் வீண்செலவுகள், விபத்துகள் இவை ஏற்படும் நகை, நிலம் இவற்றை விற்க வேண்டிவரும். மே மாதம் 16ம் தேதிவரை 10ம் இடத்துக்கு வரும் ராகு பகவான் தொழில் வெற்றி ,எதிர்பாராத தனவரவு இவற்றைக் கொடுப்பார். மனபலத்தையும் கொடுப்பார். ஆனால்,மே மாதம் 16ம் தேதிக்குப்பின் ராகுவின் 9ம் ஸ்தானத்து இட மாற்றத்தால், தந்தையின் உடல் நலம் பாதிப்பு, எதிரிகளால் அவமானம் ஏற்படும். உங்களுக்கும் உடல் நலம் கெடும். மன நலமும் பாதிக்கப்படும். இனி நாம் ஏற்கனவே கூறியபடி இந்த ஆண்டு முழுவதும் கண்ட சனியாக வலம் வரும் சனி பகவானால்,விளையப்போகும் தீய பன்கள் என்ன என்று பார்ப்போம். மனைவி மக்களுக்கு உங்கள் மீது கசப்புணர்வு ஏற்படும். சிலர் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்வர். சில்ருக்கு விரும்பத்தகாத இட மாற்றம் கிடைக்கும். பணவரவு இருக்காது.மனதில் எப்போதும் ஒருவித பயம் இருக்கும். தூக்கமும் கெடும்.. உயிர் நண்பர்களைப் பிரிய நேரும். இதுவரை சொல்லப்பட்ட ராகு, கேதுக்களின் கெடுபலன்களைப் போக்குவதற்கென்றே மே மாதம் 8ம் தேதிக்குப்பின் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் சஞ்சரித்து தேவைக்கேற்ற வருமானத்தைக் கொடுப்பார். கோர்ட், கேஸ்களில் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக வரும்.எதிரிகளின்சதிகூட உங்களுக்குச் சாதகமாக வரும். தீராத பிரச்சினைகள் தீரும். சனியின் பாதிப்புகளையும் மீறி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பதிய தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்க
ும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு வேலையில் சுமுகமான சூழ்நிலை நிலவும்.இனி மாதவாரியான பலன் களைப் பார்ப்போம்.மார்ச்,ஏப்ரல், ஆகஸ்ட்,அக்டோபர், நவம்பர் முதலிய மாதங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். எதற்கும் கலங்காமல் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வந்தால் இறைவன் அருள் பெற்று நிம்மதியாக வாழலாம்.

பரிகாரம்

————

சனிக்கிழமை சனீஸ்வா பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும் ஞாயிற்று  கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றவும். வாழ்க வாழ்கவே!

Advertisements