ஆடுகளம் விமர்சனம் aadukalam review

பொல்லாதவனில் ஒரு பைக்கை வைத்துக் கொண்டு விளையாடிய தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி இந்த முறை கிராமங்களில் நடக்கும் சேவல் சண்டையை வைத்து விளையாடியிருக்கிறார்கள்… அதில் பைக் மேல் உள்ள கிரேஸ் என்றால் இதில் சேவல் மேல் வைக்கும் ஈகோ… சும்மா சொல்லக் கூடாது… அருமையாய் விளையாடியிருக்கிறார்கள்.மதுரையில் நடந்த உண்மைக் கதையாம் இது….முதல் பாதி இறுதியில் அந்த பதினைந்து நிமிடங்கள் சேவல் சண்டையை தத்ரூபமாகக் காட்டி த்ரில் மூட்டிய வெற்றிமாறன் இரண்டாவது பாதியில் மனிதர்களையே சண்டைச் சேவல்களாய் உருண்டு புரள வைத்திருப்பது அருமை!

aadukalam dhanush movie review

கதை :  சேவல் சண்டை வித்தையில் கை தேர்ந்தவர் பேட்டைக்காரன். அவரிடம் சேவல் சண்டை கலை  பயில்பவர்கள் கருப்பு ( தனுஷ்) மற்றும் துரை… அதே ஊரில் இருக்கும்  இன்ஸ்பெக்டருக்கும் பேட்டைக்காரனுக்கும் தொடர் சேவல் சண்டைகள். அதில் இன்ஸ்பெக்டருக்கு தொடர் தோல்விகள். எப்படியாவது பேட்டைக்காரனை ஒரு போட்டியில் தோற்கடித்தே தீருவது என்று அலையும் இன்ஸ்பெக்டருக்கு வாகாய் ஒரு டோர்னமென்ட் வர , அதில் பேட்டைக்காரன் ஜெயிக்காது என்று சொன்ன சேவலை வைத்து விளையாட நினைக்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் , தனுஷ் போட்டியில் ஜெயித்து மூன்று லட்சம் ரொக்கமும் ஜெயிக்கிறார்.   அதிலிருந்து தான் தொடங்குகிறது குருவான பேட்டைக் காரனுக்கு சிஷ்யனான தனுஷின் மீது பொறாமை.  அந்தப் பொறாமையும் ஈகோவையையும் வைத்து பின்பாதியை லாவகமாக நகர்த்தி வில்லன்களே  அவசியமில்லாமல் செய்கிறார் வெற்றிமாறன்.  இடையில் தனுஷ் ஆங்கிலோ இந்தியப் பெண் டாப்சியை காதலிப்பதும் அழகாய் கதையில் கோர்க்கப்பட்டிருக்கிறது. அந்தப் பொறாமை வலையில் தனுஷ் விழுந்து கடைசியில் எழுந்து காதலில் ஜெயிக்கிறாரா என்பதே கதை.

ஹைலைட்ஸ் :

ஆடுகளம் சினிமா விமர்சனம்

கேமரா : படத்தில் கேமரா  விளையாடுகிறது… மதுரையின்  கிராமங்களின் சந்து பொந்துகளில் புகுந்துசடுககுடு ஆடுகிறது. கேமரா அற்புதம்!வெல்டன் வேல்ராஜ்

இசை  : ஜிவி பிரகாஷுக்கு ஆடுகளம் ஒரு திருப்புமுனை… “யாத்தி யாத்தி” என்று சொந்தக் குரலில் உருகுவதாகட்டும் ரொம்ப நாள் கழித்து எஸ்.பி.பியை “ஐயையோ” என்று குழைய வைப்பதாகட்டும்  ரீ ரிக்கார்டிங்கில் சேவல் சண்டைக்கும் மனித ஈகோ சண்டைக்கும் பில்டப் ஏற்றுவதாகட்டும்… ஹேட்ஸ் ஆஃப் ஜி.வி.பிரகாஷ்.

aadukalam dhanush

வசனம் : வெற்றி மாறனின் வசனங்கள் நம்மை மதுரைக்கே அழைத்து செல்கிறது… அதிலும் ஒவ்வொரு கதா பாத்திரமும் நகமும் சதையுமாய் நம் முன் உலா வரக் காரணம் அந்த வசனங்கள் தான்…காதலி டப்ஸியை வெளியே அழைத்துச் சென்று வரும் தனுஷ் அவர் பேசும்போது “இது வரைக்கும் நீ பேசற இங்கிலிஷ் தான் புரியல இப்போ நீ பேசற தமிழும் புரியல…” என்னும் இடம் ஒரு சாம்பிள்..

திரைக்கதை : திரைக்கதை ஸ்பெஷலிஸ்ட் தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் வெற்றி மாறன். கதையில் திருப்பங்கள் எல்லாமே இயல்பாய் தோன்றுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடவடிக்கைக்கும் காரண  காரியங்கள் அழகாய் காட்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலும் சூழ்நிலைகளையே வில்லனாகும் யுக்தி அருமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிப்பு :

எழுத்தாளர் ஜெயபாலன் : ஆஹா… என்ன ஒரு இயல்பான நடிப்பு.  முகத்தின் ஒவ்வொரு நரம்பும் நடிக்கறது இவருக்கு. … கோபமாகட்டும், கனிவாகட்டும்,  ஈகோவாகட்டும், பொறாமையாகட்டும், குழப்பமாகட்டும் கை காலை அசைக்காமல்  கண்களிலேயே காட்டி விடுகிறார் இவர். பேட்டைக்காரனாக வாழ்ந்திருக்கிறார்.

aadukalam tapsi ஆடுகளம் சினிமா விமர்சனம்

டப்ஸி : அவ்வளவாக வாய்ப்பில்லாவிட்டாலும் தன் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார். கவர்ச்சியாக முதல் சீனில் ஷார்ட்ஸில் தோன்றி அதன் பிறகு படம் முழுக்க  ஃபுல் கவுனோடு வருகிறார் … ஆனாலும் அந்த ஆங்கிலோ இந்தியப் பெண் ரோலுக்கு கன கச்சிதமாய் பொருந்துகிறார்.

ஆடுகளம் விமர்சனம் aadukalam movie review

தனுஷ் : தனுஷ் தன் சிறந்த நடிப்பை இந்தப் படத்தில் மேலும் மெருகேற்றியிருக்கிறார். அந்த கிராமத்து நேட்டிவிட்டிக்காக சிரமப் பட்டதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. நடு நடுவே “யாத்தி யாத்தி ” “ராப் சாங்க்” என்று டான்ஸிலும் தன் வழக்கமான முத்திரையைப் பதித்திருக்கிறார். அதிலும் சேவலிடம் அவர் சொல்லும் ” பந்தயம் மட்டும் கொடுத்துடாதே” அவ்வளவு உணர்ச்சிகரமாய் இருக்கிறது. இந்தக் கருப்பு தோற்கக் கூடாது என்று நம்மை நினைக்க வைக்கிறது. தனுஷுக்கு ஆடுகளம் ஒரு மைல் கல்.

சண்டைக் காட்சிகள் : சேவல் சண்டைக் காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று டைட்டிலில் போடுகிறார்கள் ( அப்படியா? ) . வெகு த்ரில்லிங்காக இருக்கிறது. மனித சண்டைக் காட்சிகள் கிராமத்து சண்டைகளைப் போல இயல்பாய் வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

aadukalam vetrimaran ஆடுகளம் வெற்றிமாறன்

இயக்கம் : வெற்றி மாறன் நகரத்திலிருந்து கிராமத்துக் லாவகமாய் போயிருக்கிறார். சேவல் சண்டையை வைத்து  முதல் பாதியை ரொம்ப நேட்டிவிட்டியோடு கொண்டு போகிறார். இரண்டாவது பாதியில் மனித உணர்வுளை வைத்து விளையாடி தான் பாலுமகேந்திராவின் சிஷ்யன் என்று நிரூபிக்கிறார். சம்பவங்களை அழகாக கோர்த்து கடைசி வரை டென்ஷனை மெயின்டெயின் செய்கிறார். ஒரு நொடி தொய்வில்லாமல் கதையை கொண்டு செல்கிறார். கதாபாத்திரங்களை அந்தந்த கேரக்டராய் வாழ வைத்திருக்கிறார். அதிலும் அந்த போயடிக் ஃபினிஷ் ரொம்பவே ரியலிஸ்டிக். வெற்றி மாறன் தமிழ்ப் பட இயக்குநர்களில் கவனிக்கப் பட வேண்டியவர்!

ஆக, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய , அழகான காதலைக் கொண்ட, உணர்ச்சிகரமான கதையைக் கொண்ட, ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை ஆடுகளம்! தனுஷும் வெற்றி மாறனும் நின்று ஆடும் வெற்றிக்களம்!

ஃபைனல் வெர்டிக்ட் : நிச்சயம் ஹிட் மச்சி !

[stextbox id=”alert”]வத்தி வாத்தியாரின் லேட்டஸ்ட் வத்தி : எல்லா கிராமத்து படத்துலயும் கணவன் மனைவியப் பாத்து பாத்திரத்தை வீச மனைவி லாஸ்ட் மினிட்ல குனிய பாத்திரம் ஜஸ்ட் மிஸ்ஸாவுதே… அதுக்குன்னு மனைவிங்களுக்கு தனி ட்ரெய்னிங்க் எதும் குடுப்பாஹளா?[/stextbox]

Advertisements