காவலன் விமர்சனம் kavalan movie review

பல படங்களின் தொடர் தோல்விகளுக்குப் பிறகு விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் “காவலன்”. அதிலும் இந்தப் படமும் தோல்வியயைத் தழுவி விட்டால் விஜயின் ஸ்தானம் நிச்சயமாய் கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலைமையில் வந்திருக்கும் படம் காவலன்.  ஒரு காலத்தில் மலையாள “அன்னியத்த பிராயு” விஜய்க்கு “காதலுக்கு மரியாதையாய்” தூக்கி விட்டது. பின்னர் சித்திக் இயக்கிய “ஃப்ரண்ட்ஸ்” கூட மலையாள இறக்குமதி தான். விஜயின் “மாஸ்” ஹீரோ பில்டப்புகள் சலித்துப் போக அவரின் தெலுங்கு மசாலாக்கள் திகட்டிப் போக… விஜய் மீண்டும் தனக்கு கை கொடுத்த மலையாள திசையில் திரும்பியிருக்கிறார். சித்திக் விஜய் மீண்டும் இணைந்திருக்கும் படம் “காவலன்” மலையாள பாடிகார்டின் ரீமேக்… காவலன் விஜயை காப்பாற்றியிருக்கிறானா? பார்ப்போம்….

kavalan movie review காவலன் விமர்சனம்

கதை : தன் உயிரைக் காப்பாற்றி பெய்ரிட்ட பெரியவருக்கு ஒரு ஆபத்து என்றதும் அவருக்கு பாடி கார்டாய் போகிறார் விஜய். அங்கே அவருக்கு வேறு வேலை கிடைக்கிறது. அசினுடன் கூடவே காலேஜுக்கு மாணவனாய் போய் அவரை வில்லன் கூட்டத்திலிருந்து பாதுகாப்பது… கூடவே தொடரும் பாடி கார்ட் விஜய் தொல்லையாக… அவரைத் திசைததிருப்ப யாரோ ஒரு பெண்ணாய் அசின்  ஃபோனிலேயே அவரைக் காதலிப்பதாய் அடிக்கடி பேச… விஜய் சீரியாசாக அந்த ஃபோன் செய்யும் பெண்ணை விரும்ப… விளையாட்டாய் ஆரம்பித்த அசின் போகப் போக விஜயை உண்மையாய் நேசிக்கத் தொடஙகுகிறார். ஆனால் அசினுக்கு ஏற்கனவே நிச்சயமாகியிருக்கிறது. விஜயை அசின் ஃபோனில் ஊரை விட்டு ஓடிப்போக கூப்பிட… தான் ஓடப் போவதுடதன் முதலாளி மகளென்றே தெரியாமல் விஜய் வாக்கு கொடுக்க.. விஜய் அசினுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா இல்லை தன் பெரியவருக்கு பட்ட நன்றிக்கடனை காப்பாற்றுவாரா என்பதுதான் ப்ளாட்.

kavalan movie review

கேமரா : சுமார் ரகம். பாடல் காட்சிகளில் மட்டும் வெளிநாடுகளை நன்றாய் படம் பிடித்திருக்கிறார்கள்.

வசனம் : சர வெடி சிரிப்புகள் நன்றாய் இருந்தாலும் சித்திக் இது மலையாளப் படம் இல்லை என்று நினைவில் வைத்து கொஞ்சம் ட்ரிம் செதிருக்கலாம்.

இசை : வித்யாசாகர்… ரீரெக்கார்டிங்கும் சரி பாடல்களும் சரி சுமார் ரகம் தான் . வழக்கமாக விஜய் படங்களுக்கு பாடல்கள் கொடுக்கும் பெப்பப் இதில் இல்லை.

நடிப்பு :

kavalan movie review

விஜய் : தனக்கு கொடுத்த வேலையை நிறைவாய் செய்திருக்கிறார். முந்தைய படங்களுக்கு கிடைத்த ஃபீட்பேக்கை வைத்து “மாஸ் லீடர்” இமேஜை மூட்டை கட்டி வைத்து விட்டு சராசரி விஜயாய் மீண்டும் மாறியிருக்கிறார். ரியலிஸ்டிக் விஜய் பார்க்க நன்றாகவே இருக்கிறது. காமெடியிலும் சரி உணர்ச்சி கரமான காட்சிகளிலும் சரி சண்டைக் காட்சிகளிலும் சரி பழைய விஜயை ரொம்ப காலம் கழித்து பார்க்கும் உணர்வு.

kavalan movie review விஜய் அசின் காவலன் விமர்சனம்

அசின் : அசினுக்கு வெயிட்டான ரோல். ஒரு புறம் காதலியாய் விஜயிடம் உருகி மறுபுறம் தான் யாரென்று சொல்ல முடியாமல் விஜய் படும் கஷ்டங்களைப் பார்த்து கலங்கி… அழகாய் செய்திருக்கிறார். பாடல்களில் கவர்ச்சி கமியென்றாலும் விஜயுடன் சரியாய் செட்டாகிறார்.

ராஜ்கிரண் : ராஜ்கிரணை இன்னொரு படத்தில் இதே போல் ரோலில் பார்த்தால் போரடித்துவிடும் ராஜ்கிரண் சுதாரிப்பது நல்லது.

வடிவேல் : வைகைப் புயல் இந்தப் படத்தில் சரியாய் மையம் கொண்டிருக்கிறார். ரொம்ப நாள் கழித்து நன்றாக சிரிக்க வைக்கிறார். அதிலும் அவர் இங்கிலிஷை வைத்துக் கொண்டு செய்யும் லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது…

சில சாம்பிள்

“பாஸ்… யாரோ பார்வதி நம்பியாராம்.. ஃபோன் வந்திருக்கு “

“டேய் அது ப்ரைவேட் நம்பர்டா”

“ரெண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங்கா பாஸூ?”

இன்னொரு சாம்பிள்

“பாஸ்… இவ இப்படி டைமுக்கு  வேலை செய்யறதாலதான் எங்க முதலாளி இவள ப்ரெக்னென்ட் ஆக்கியிருக்காரு!”

“அய்யோ..அது பர்மனன்ட் ஆக்கியிருக்காருங்க!”

இப்படி வடிவேலு ரகளை செய்கிறார்.

காவலன் திரை விமர்சனம் kavalan  movie review

இயக்கம் : சித்திக் கதைக்கு எது தேவையோ கொடுத்திருக்கிறார். ஆனால் பிற்பாதியில் கொஞ்சம் இழுவையை தவிர்த்திருக்கலாம். ஆனால் ரொம்ப  நாள் கழித்து ரியலிஸ்டிக் விஜயை காட்டியிருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். கதையின் திருப்பங்களை நம்பும்படி கொண்டு போகிறார் சித்திக் .

ப்ளஸ்

ஜெட் வேக முதல் பாதி

ரகளை கட்டும் வடிவேல் காமெடி

ரியலிஸ்டிக் விஜய்

அசினின்  நடிப்பு

வித்தியாசமான ப்ளாட்

மைனஸ்

இழுவையான பிற்பாதி – கடைசி 4 ரீல்களை நிச்சயம் ட்ரிம் செய்து ஒரு ரீலாக்கியிருக்கலாம்.

சுமாரான இசை

சிம்பிள் வெர்டிக்ட் : கப்பாத்திடும் மச்சி ! பட் சூப்பர் ஹிட்டில்ல!

[stextbox id=”alert”]வத்தி வாத்தியாரின் லேட்டஸ்ட் வத்தி : இளைஞன் படத்தை ஓட்டத்தான் காவலனுக்கு தியேட்டர் கிடைக்கலன்னு ஜெயா டிவில சொல்றாங்களே… விஜய் படத்துக்கு தியேட்டர் கிடைக்க அம்மா ஏன் உருகுறாங்க? காவலன் அம்மாவுக்கு காவலனாகப் போறாரா?[/stextbox]

Advertisements