பூவிதழில்..
புன்னகைப்பொங்கல்.

உன் பார்வைகளில்..
என் பரவசப்பொங்கல்.

என் நெஞ்சத்தில்..
உன் நினைவுப்பொங்கல்.

உன் அழகினில்..
என் ஆசைப்பொங்கல்.

நம் கண்களில்..
கனவுப்பொங்கல்.

மாலையில்..
மயக்கப்பொங்கல்.

ராத்திரியில்..
ரகசியப்பொங்கல்.

காணும் நாட்களில்..
கற்கண்டுப்பொங்கல்.

பாரமுகத்தில்..
பசலைப்பொங்கல்.

தனிமையில்..
தவிப்புப்பொங்கல்.

விழித் தூண்டலில்..
விரகப்பொங்கல்.

விரல் தீண்டலில்..
வெட்கப்பொங்கல்.

உன் சம்மதங்களில்..
சல்லாபப்பொங்கல்..

நம் சங்கமங்கள்..
சர்க்கரைப்பொங்கல்.

நம் காதலில்..
இந்த கவிதைப்பொங்கல்.

Advertisements