த டூரிஸ்ட் விமர்சனம்

படம் : தி டூரிஸ்ட்

ரிலீஸ் தேதி : 2010-12-10
இயக்கம் : ஃப்ளோரின் ஹெங்கல் வான் டொன்னர்ஸ்மார்க்

நடிப்பு : ஜானி டெப்  (Johnny Depp) ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie), பால் பெட்டானி (Paul Bettany), டிமொதி டேல்டன் (Timothy Dalton)   , ரஃபஸ் செவல் (Rufus Sewell)
கதை : ஜானி டெப்  எதிர்பாராத விதமாக யூரோப்புக்கு டூர் போகிறார். அங்கே ஏஞ்சலினா ஜோலியை சந்திக்கிறார். வேண்டுமென்றே தன் வழியில் குறுக்கிடும் ஏஞ்சலினா ஜோலியிடம் ஃப்ளர்ட் செய்யப் பார்க்கிறார்.  ஆரம்பத்தில் அவரை முத்தமிட்ட ஜோலி  மறுநாள் காலை மாயமாய் மறைகிறார். ஆனால் அவர் முத்தமிட்ட மறுநாளிலிருந்தே சில மர்ம நபர்கள் ஜானி டெப்பை கொலை செய்ய முற்படுகின்றனர். போலீஸ் அவரை துரத்துகிறது. அப்படி இப்படி அவர்களிடம்  தப்பி இன்ஸ்பெக்டர் டிமோதி டேல்டனிடம் போய் முறையிடுகிறார் டெப்… அப்போதுதான் அவருக்கு தெரிகிறது ஏஞ்சலினா ஜோலிக்கு பியர்ஸ் என்று ஒரு காதலன் இருப்பதாகவும் அவர் பல கோடி பணத்தை திருடி விட்டதாகவும் ஜோலி பலர் பார்வையிட ஜானி டெப்பை முத்தமிட்டதால் பலரும் ஜானி டெப்தான்  பியர்ஸ் என்று நினைத்து அவரைத் தொடர்கிறார்கள் என்று…

the tourist - tamil

ஒரு படகில் ஜானி டெப் ஏடா கூடமாய் சிக்கிக் கொள்ள மீண்டும் அவர் வாழ்க்கையில் ஏஞ்சலினா ஜோலி குறுக்கிடுகிறார். அவரை படகில்  இருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார். ஜானி டெப்பை பயன்படுத்தி தன்னுடைய காதலன் பியர்ஸை காப்பாற்றியதாக ஒத்துக் கொள்கிறார்.

angelina jolie

கதையில் இன்னொரு திருப்பம் … ஏஞ்சலினா ஜோலி ஒரு போலீஸ் ஏஜன்ட். அவர் அலெக்சாண்டர் பியர்சை கைது செய்ய போயிருக்கிறார். அங்கே தான் அவர் பியர்சிடம் காதல் வயப்பட்டிருக்கிறார். …
angelina jolie ஏஞ்சலினா ஜோலி
இரண்டு மூன்று சந்திப்புக்களுக்குப் பிறகு ஏஞ்சலினா தான் அலெக்சாண்டர் பியர்ஸ் , ஜானி டெப் இருவரையுமே விரும்புவதாய்க் குழம்புகிறார்…

அப்படி இப்படி சுற்றி கதை சுற்றி கடைசியில் க்ளைமேக்சில் ஒரு லாக்கரைத் திறப்பதில் வந்து நிற்கிறது. அந்த லாக்கரைத் திறக்கும் பாஸ்வர்ட் பியர்சுக்கு மட்டுமே தெரியும்… ஜானி டெப் அந்த லாக்கரைத் திறந்து தான் தான் உண்மையான் பியர்ஸ்… தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாய் சொல்கிறார்… காதலர்கள் சுபமாய் இணைகிறார்கள்
ப்ளஸ் :
அழகான சீனரி… வெனிஸ் நகரம்
திடீர் திருப்பங்கள்
அழகான ஏஞ்சலினா
மைனஸ்
குழப்பமான திரைக்கதை
ஏஞ்சலினா – ஜானி டெப்பின் ஏழாம் பொருத்தம்

பார்க்கலாமா ? லாம்….. டிவிடியில் !
Advertisements