பகவத் கீதைக்கு உரை எழுத வேண்டிய அவசியம் என்ன? ஆயிரம் ஆயிரம் உரைகள் இருக்க இன்னொரு உரை எதற்கு? சில உரைகளின் நடை இன்றைய தலைமுறைக்கு கடினமாயிருக்கலாம்… சில உரைகளில் “அந்தணர்கள்..பாவம் புண்ணியம்” என்று உரையெழுத வந்தவர்களின் உள்குத்து நிறைய … சிலவற்றில் இன்றைய வாழ்க்கைக்கு ஏற்புடையதில்லாத பல வாசகங்கள்… ( உதாரணம் : ஆயிரம் யானைகளை வைத்து யாகம்)…….. அதனால் இந்த உரையில் என்னால் இயன்ற அளவு பகவத் கீதையை இன்றைய ரிலவன்சுடன் எளிய நடையில் கொடுக்க  முயற்ச்சித்திருக்கிறேன்… முயற்சி தொடர உங்கள் வாழ்த்துக்களும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்!

முதல் அத்தியாயம்

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

॥ அத ஸ்ரீமத் பகவத்கீதா ॥

அத ப்ரதமோத்யாய

அர்ஜுந விஷாத யோகம்

த்ருதராஷ்ட்ர உவாச
தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:।
மாமகா: பாண்டவாஷ்சைவ கிமகுர்வத ஸம்ஜய ॥ 1.1 ॥

கௌரவர்களின் அப்பா திருதராஷ்டிரர். அவருக்கு கண்பார்வை இல்லை அதனால் போரில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து சொல்ல சஞ்சயனை பக்கத்தில் வைத்திருக்கிறார். சஞ்சயனிடம் திரதராஷ்டிரர் கேட்கிறார்

“எல்லாரும் யாத்திரைக்குப் போற புண்ணியதலம் குருஷேத்திரம். ஆனா அந்தக் குருஷேத்திரத்தில சண்டை போட  என் மகன்கள் கௌரவர்களும் என் தம்பி பாண்டுவின் மகன்கள் பாண்டவர்களும் கூடியிருக்கிறாங்க… அங்க இப்போ நடக்குது சஞ்சயன்?”

ஸம்ஜய உவாச।
த்ருஷ்ட்வா து பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதநஸ்ததா।
ஆசார்யமுபஸம்கம்ய ராஜா வசநமப்ரவீத்॥ 1.2 ॥

சஞ்சயன் திருதராஷ்டரரிடம் சொன்னான் ” மன்னா , பாண்டவர் படையை பார்த்த துரியோதனன் தன் குருவைப் பாத்து  பேசுறாரு…

பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்।
வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ ஷிஷ்யேண தீமதா॥ 1.3 ॥

துரியோதனன் அவனோட குரு துரோணரிடம் சொன்னான் :

“குரு ! பாண்டவர்களால  திறமையா கூட்டப்பட்ட இந்தப் படையைப் பாருங்க !”

அத்ர ஷூரா மஹேஷ்வாஸா பீமார்ஜுநஸமா யுதி।
யுயுதாநோ விராடஷ்ச த்ருபதஷ்ச மஹாரத:॥ 1.4 ॥

குரு ! இந்தப் படையில பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமா வீரமா அம்பு விடுறவங்க நெறய பேரு இருக்காங்க. யுயுதானன், விராடன், துருபதன் மாதிரி  ரதம் விடுறவங்களும் நெறயா  இருக்காங்க.

த்ருஷ்டகேதுஷ்சேகிதாந: காஷிராஜஷ்ச வீர்யவாந்।
புருஜித்குந்திபோஜஷ்ச ஷைப்யஷ்ச நரபும்கவ:॥ 1.5 ॥
யுதாமந்யுஷ்ச விக்ராந்த உத்தமௌஜாஷ்ச வீர்யவாந்।
ஸௌபத்ரோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வ ஏவ மஹாரதா:॥ 1.6 ॥
அஸ்மாகம் து விஷிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம।
நாயகா மம ஸைந்யஸ்ய ஸம்ஜ்ஞார்தம் தாந்ப்ரவீமி தே॥ 1.7 ॥

குருவே… பாண்டவர் பக்கம் நெறய தெறமையான ஆளுங்க இருக்காங்க… இப்ப என் படை வீரர்களைப் பத்தியும் நான் சொல்லுறேன் கேளுங்க!

பவாந்பீஷ்மஷ்ச கர்ணஷ்ச க்ருபஷ்ச ஸமிதிம்ஜய:।
அஷ்வத்தாமா விகர்ணஷ்ச ஸௌமதத்திஸ்ததைவ ச॥ 1.8 ॥

எப்போதுமே எந்தப் போரிலயுமே தோக்காத நீங்களும் பீஷ்மர், கர்ணன், கிருபர், அஸ்வததாமன், விகர்ணன், மாதிரி வீரர்கள் இருக்கீங்க!

அந்யே ச பஹவ: ஷூரா மதர்தே த்யக்தஜீவிதா:।
நாநாஷஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஷாரதா:॥ 1.9 ॥

எனக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய வீரர்கள் நெறய இருக்காங்க. அவங்க கிட்ட பல விதமான ஆயுதம் இருக்கு.

அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரக்ஷிதம்।
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரக்ஷிதம்॥ 1.10 ॥

எனது தாத்தா பீஷ்மர் காக்குற நம்ம் படை எண்ண முடியாத அளவுக்குப் பெரிசு. ஆனா பீமன்  காக்குற  பாண்டவர் படைய சுலபமா எண்ணிப்புடலாம்.

அயநேஷு ச ஸர்வேஷு யதாபாகமவஸ்திதா:।
பீஷ்மமேவாபிரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி॥ 1.11 ॥

படை யோட முக்கியமான முனைகள்ள இருந்து  நீங்களும் மததவங்களும் என் தாத்தா பீஷ்மருக்கு பாதுகாப்பு கொடுங்க!

இப்படி துரியோதனன் தன் குருவிடம் சொன்னான்.

தஸ்ய ஸம்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:।
ஸிம்ஹநாதம் விநத்யோச்சை: ஷங்கம் தத்மௌ ப்ரதாபவாந்॥ 1.12 ॥

அனைவருக்கும் மூத்த வீரரான முதியவர் பீஷ்மர் தனது சங்கை ஊதினார். அந்த சங்கின் ஒலி கர்ஜனையாய் துரியோதனன் காதில் ஒலித்து அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.               ( அந்தக் காலத்தில் வீரர்கள் தாங்கள் போருக்குத் தயார் என்பதை ஒரு சங்கை முழுக்கி அறிவிக்கும் வழக்கம் இருந்தது)

தத: ஷங்காஷ்ச பேர்யஷ்ச பணவாநககோமுகா:।
ஸஹஸைவாப்யஹந்யந்த ஸ ஷப்தஸ்துமுலோ அபவத்॥ 1.13 ॥

சங்குகள், குழல்கள், முரசுகள், பறைகள், கொம்புகள் இவை எல்லாம் ஒரே சமயத்தில் பலரால் முழக்கப்பட அதெல்லாம் கலந்து எழுப்பிய ஒலி அங்கு கூடியிருந்த வீரர்களுக்கு கிளர்ச்சி எழுப்பியது.

தத: ஷ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ।
மாதவ: பாண்டவஷ்சைவ திவ்யௌ ஷங்கௌ ப்ரதக்மது:॥ 1.14 ॥

போர்முனையின் எதிர்புறம் , வெள்ளைக் குதிரைகள் இழுத்து வந்த ரதத்தில் ரத ஓட்டியாக அமர்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் தங்கள் சங்குகளை முழங்கினார்கள்.

பாம்சஜந்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநம்ஜய:।
பௌண்ட்ரம் தத்மௌ மஹாஷங்கம் பீமகர்மா வ்ருகோதர:॥ 1.15 ॥
அநம்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:।
நகுல: ஸஹதேவஷ்ச ஸுகோஷமணிபுஷ்பகௌ॥ 1.16 ॥

காஷ்யஷ்ச பரமேஷ்வாஸ: ஷிகண்டீ ச மஹாரத:।
த்ருஷ்டத்யும்நோ விராடஷ்ச ஸாத்யகிஷ்சாபராஜித:॥ 1.17 ॥

த்ருபதோ த்ரௌபதேயாஷ்ச ஸர்வஷ: ப்ருதிவீபதே।
ஸௌபத்ரஷ்ச மஹாபாஹு: ஷங்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்॥ 1.18 ॥

அனைத்து முதன்மை வீரர்களும் தத்தம் சங்குகளை முழங்கினார்கள்.

ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்।
நபஷ்ச ப்ருதிவீம் சைவ துமுலோ அப்யநுநாதயந்॥ 1.19 ॥

சங்கொலி பேரொலியாக எதிரொலிக்க திருதராஷ்டிரரின் மகன்களான கௌரவர்களுடைய இதயங்கள் நடுஙகின.

அத வ்யவஸ்திதாந்த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:।
ப்ரவ்ருத்தே ஷஸ்த்ரஸம்பாதே தநுருத்யம்ய பாண்டவ:॥ 1.20 ॥

ஹ்ருஷீகேஷம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே।

அப்போது பாண்டுவின் மகன் அர்ஜுனன் கௌரவர்களை நோக்கி அம்பை எய்யாம  ஸ்ரீ கிருஷ்ணரை தேரைப் பின்னால் இழுத்து வரச் சொன்னான்.

அர்ஜுந உவாச।
ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத॥ 1.21 ॥

யாவதேதாந்நிரிக்ஷே அஹம் யோத்துகாமாநவஸ்திதாந்।
கைர்மயா ஸஹ யோத்தவ்யமஸ்மிந்ரணஸமுத்யமே॥ 1.22 ॥

அப்போது அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறினான்  “அழிவுங்கற ஒண்ணே இல்லாதவனே ! இங்க எங்களுக்கு எதிரா சண்டை போட  வந்திருக்கும் கௌரவர் படையில நான் யாரோட சண்டை போடறதுன்னு முடிவெடுக்கணும். அதுக்கு வசதியா  நீங்க ரெண்டு    படைக்கும்       சென்டர்ல கொண்டு போய் இந்தத் தேரை நிறுத்துங்க !”

யோத்ஸ்யமாநாநவேக்ஷே அஹம் ய ஏதே அத்ர ஸமாகதா:।
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர்யுத்தே ப்ரியசிகீர்ஷவ:॥ 1.23 ॥

“கெட்ட மனசுக்காரன்  துரியோதனனை சந்தோஷப்படுத்தணுங்கறதுக்காகவே  இங்கு சண்டை போட வந்திருக்கறவங்கள நான் பாக்கணும்.” என்றான் அர்ஜுனன்.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஷோ குடாகேஷேந பாரத।
ஸேநயோருபயோர்மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்॥ 1.24 ॥

சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் கூறினான் ” அர்ஜுனன் இப்படி சொன்னதும் ஸ்ரீ கிருஷ்ணர் அந்தத் தேரை இரண்டு  சேனைகளுக்கும் நடுவே கொண்டு போய் நிறுத்தினார்.

( முழு கீதையுமே சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்ன போர் பற்றிய ரன்னிங் கமென்ட்ரியின் ஒரு பகுதிதான் ! )

பீஷ்மத்ரோணப்ரமுகத: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்।
உவாச பார்த பஷ்யைதாந்ஸமவேதாந்குரூநிதி॥ 1.25 ॥

பீஷ்மர்,  துரோணர் போன்ற பெருந்தலைவர்கள் முன்னிலையில் ஸ்ரீகிருஷ்ணன் ” அர்ஜுனா! இங்கு கூடியிருக்கறங்களப் பாரு ! ” என்றார்….

தத்ராபஷ்யத்ஸ்திதாந்பார்த: பித்ருநத பிதாமஹாந்।
ஆசார்யாந்மாதுலாந்ப்ராத்ருந்புத்ராந்பௌத்ராந்ஸகீம்ஸ்ததா॥ 1.26 ॥

ஷ்வஷுராந்ஸுஹ்ருதஷ்சைவ ஸேநயோருபயோரபி।

இருதரப்பு படைகளினிடையே தந்தை முறை உறவுகள், பாட்டன் முறை உறவுகள், மாமா முறை உறவுகள், சகோதர முறை உறவுகள் , மகன் முறை உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என பலரும் போர்க்களத்தில் பார்த்தான் அர்ஜுனன்.

தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்பந்தூநவஸ்திதாந்॥ 1.27 ॥

க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந்நிதமப்ரவீத்।

அர்ஜுனன் தன் நண்பர்களையும் உறவினர்களையும் எதிரணியில் பார்த்ததால் உணர்ச்சி வசப்பட்டு பேசினான்…

அர்ஜுந உவாச।
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம்॥ 1.28 ॥

ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிஷுஷ்யதி।

அர்ஜுனன் கிருஷ்ணரிடம் சொன்னான் : ” என் அன்பு கிருஷ்ணா… என் கூட சண்டை போட வந்திருக்கும் என் நண்பர்களையும் சொந்தக் காரங்களையும் பாக்குறப்ப என் உடம்பே நடுங்குது . என் வாய் வத்திப் போவுது.”

வேபதுஷ்ச ஷரீரே மே ரோமஹர்ஷஷ்ச ஜாயதே॥ 1.29 ॥

காண்டீவம் ஸ்த்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரிதஹ்யதே।

என் முடியெல்லாம்  சிலிர்க்குது. என் காண்டீப வில் என் கையிலேர்ந்து நழுவுது. என் தோல் அப்படியே  பத்திக்கிட்டு எரியுறதப் போல உணர்றேன்.

ந ச ஷக்நோம்யவஸ்தாதும் ப்ரமதீவ ச மே மந:॥ 1.30 ॥

நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேஷவ।

இனிமேலயும்  இங்க என்னால நிக்க முடியாது. என் மனசு குழம்புது. நான் என்னையே மறந்து போறேன்.  கெட்ட  கெட்ட சகுணத்தைத்தான் நான் பாக்குறேன்.

ந ச ஷ்ரேயோ அநுபஷ்யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே॥ 1.31 ॥

ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச।

என்னோட சொந்தக் காரங்களை நானே கொலை பண்றதால என்ன நல்லது நடக்கப் போகுதுன்னு எனக்கு புரியல கிருஷ்ணா ! இன்த சண்டையிலேர்ந்து கிடைக்கற வெற்றியோ, அரசாட்சியோ இல்லை இன்பமோ எனக்கு புடிக்கலை !

கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர்ஜீவிதேந வா॥ 1.32 ॥

யேஷாமர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச।
த இமே அவஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ்த்யக்த்வா தநாநி ச॥ 1.33 ॥

ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததைவ ச பிதாமஹா:।
மாதுலா: ஷ்வஷுரா: பௌத்ரா: ஷ்யாலா: ஸம்பந்திநஸ்ததா॥ 1.34 ॥

ஏதாந்ந ஹந்துமிச்சாமி க்நதோ அபி மதுஸூதந।
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே॥ 1.35 ॥

நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜநார்தந।

அரசாகட்டும், சந்தோஷமாகட்டும், ஏன் நாம் வாழுற இந்த வாழ்வே ஆகட்டும்… என்னாத்துக்கு நாம ஜெயிக்க நெனக்குறோம்… எல்லாம் நம்ம சொந்த பந்தத்துக்காகத்தானே ! அப்படி இருக்கும்போது அந்த சொந்த பந்தத்தையே கொன்னு இதெல்லாம் நான் ஜெயிச்சு என்ன பண்ணப் போறேன்? வேண்டாம் கிருஷ்ணா… மூணு உலகமே எனக்கு கிடைக்கும்னாக் கூட எனக்கு வேணாம்… எனக்கு இந்த சண்டை வேண்டாம்! நான் சண்டை போட தயாரில்ல கிருஷ்ணா!

பாபமேவாஷ்ரயேதஸ்மாந்ஹத்வைதாநாததாயிந:॥ 1.36 ॥

தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந்ஸ்வபாந்தவாந்।
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந: ஸ்யாம மாதவ॥ 1.37 ॥

இவங்க கூட சண்டை போட்டா அது பாவம். இவங்கள ஜெயிக்கறதால என்ன லாபம்? நண்பர்களையும் சொந்த பந்தம் கூடயும் சண்டை போட்டு ஜெயிச்சு நான் சந்தோஷமா இருக்க முடியுமா?

யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோபஹதசேதஸ:।
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ரத்ரோஹே ச பாதகம்॥ 1.38 ॥

கதம் ந ஜ்ஞேயமஸ்மாபி: பாபாதஸ்மாந்நிவர்திதும்।
குலக்ஷயக்ருதம் தோஷம் ப்ரபஷ்யத்பிர்ஜநார்தந॥ 1.39 ॥

அவங்க தான் ( கௌரவர்கள் ) பேராசை புடிச்சு இந்த சண்டைக்கு வாராங்க… அவங்க ஆசையினால அவங்களுக்கு இது பாவமா படல… ஆனா நமக்கு நல்லது கெட்டது நாலும் தெரியும்… நாமளும் அவங்க மாதிரியே இப்படி அநியாயமா சண்டை போடலாமா?

குலக்ஷயே ப்ரணஷ்யந்தி குலதர்மா: ஸநாதநா:।
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமதர்மோ அபிபவத்யுத॥ 1.40 ॥

ஒரு குலத்தையே அழிக்கறது பாவம்… ஒரு குலம் நாசமடைஞ்சா அதுனால என்னென்ன கேடு வரும்? அந்த வம்சத்துல வளக்கறதுக்கு ஆள் இல்லாம வளர்ர அடுத்த சந்ததி  கெட்ட பழக்கத்துக்கு அடிமையாயிடுவாங்க…

அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய:।
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:॥ 1.41 ॥

அந்த வம்சத்துல இருக்கற பொண்ணுங்க பாதுகாக்க ஆள் இல்லாம சீரழிஞ்சுடுவாங்க !

ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச।
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதகக்ரியா:॥ 1.42 ॥

அது அந்தக் குலத்தை இன்னமும் அழிச்சுடும்….

தோஷைரேதை: குலக்நாநாம் வர்ணஸங்கரகாரகை:।
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாஷ்ச ஷாஷ்வதா:॥ 1.43 ॥

அந்த வம்சத்துக்கே கெட்ட பேர் வந்திடும்…

உத்ஸந்நகுலதர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்தந।
நரகே நியதம் வாஸோ பவதீத்யநுஷுஷ்ரும॥ 1.44 ॥

வம்சத்தை அழிக்கறவங்களுக்கு நரகம் தான் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்… அப்ப்டி ஒரு வம்சத்தையே அழிக்க நாம காரணமாகணுமா?

அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்।
யத்ராஜ்யஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநமுத்யதா:॥ 1.45 ॥

ஒரு அரசாட்சி செய்ற வாய்ப்புக்காக… அரசன்கற சுகபோகத்துக்கு ஆசப்பட்டு நான் இப்படிப்பட்ட பாவம் செய்யறத்துக்கு தயாரானது எனக்கே ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு…

யதி மாமப்ரதீகாரமஷஸ்த்ரம் ஷஸ்த்ரபாணய:।
தார்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் பவேத்॥ 1.46 ॥

இப்படி அநியாயமா சண்டை போட்டு அவங்கள அழிக்கறதவிட அவங்க கையால சாகறது மேல்!

ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்யே ரதோபஸ்த உபாவிஷத்।
விஸ்ருஜ்ய ஸஷரம் சாபம் ஷோகஸம்விக்நமாநஸ:॥ 1.47 ॥

இந்தக் காட்சிய அப்படியே சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்…

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அர்ஜுநவிஷாதயோகோ நாம ப்ரதமோ அத்யாய:॥ 1 ॥

இத்துடன் முதல் அத்தியாயம் நிறைவு பெறுகிறது… அர்ஜுனரின் கலக்கத்தைப் போக்க கிருஷ்ணர் சொன்னதுதான் கீதை… இன்னும் வரும்……….

Advertisements