காதல் முத்தம்….

முத்தங்கள்..
இதழ்கள் பேசும்
தேன் மொழியா?
இல்லை..
கனி மொழியா?.

காதல் பேசும்..
தாய் மொழியும்..
முத்தம்தான்.

காமம் பேசும்..
முதல் மொழியும்..
முத்தம்தான்.

முத்ததின் மொழி..
மௌன மொழியா?
இல்லை..
வெட்க மொழியா?

என்னைப் போலவே..
உனக்காய்..
காத்திருக்கிறது..
என் முத்தங்களும்..

(கவிதை முத்தங்கள்.. தொடரும்)

-பிரியன்

Advertisements