சேஃப்டி ஃபிகர பிக்கப் பன்னூவது எப்படி?

[stextbox id=”alert”]

முந்தய பகுதிகள்

# ஃபிகர் மடக்குவது எப்படி?- 1
# ஃபிகருக்கு என்ன பிடிக்கும் – ஃபிகர் மடக்குவது எப்படி? – 2

# ஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்

ஃபிகர் மடக்குவது எப்படி -4 – க்ளீசரின் ஃபிகர்ஸ்

[/stextbox]

சுந்தர காண்டம்னு ஒரு பழைய பாக்கியராஜ் படம்… அதுல ஒரு டயலாக் வரும் … ஒரு பெண் எப்போது பெண்ணாகிறாள்?னு… அதாவது ஒரு பொண்ணு பொறக்கும்போது 25 மார்க் வாங்குறளாம்… அப்புறம் வயசுக்கு வர சொல்லோ 25 மார்க் வாங்குறாளாம்… அப்பால கண்ணாலம் ஆவும்போது இன்னொரு 25 மார்க் வாங்குறாளாம்… ஆனா அவ கொயந்தைன்னு ஒண்ண பெத்து எப்ப அம்மா ஆவுறாளோ அப்போதான் அவ நூறு மார்க் வாங்குறாளாம்… பாக்கியராஜ் போல நான் ஒரு ஆண் எப்போ ஆண் ஆவுறான்னு யோசிச்சேன்… ஒரு ஆண் பொறக்கும்போது 25 மார்க் வாங்குறான்… அவன் வளந்து ஒரு வேலைக்கு போவ சொல்லோ இன்னொரு 25 மார்க் வாங்குறான்… அவன் எப்போ ஒரு ஃபிகரை மடிக்கறானோ அப்பவே அவன் மீதி 50 மார்க் வாங்கி நூத்துக்கு நூறு மார்க் வாங்கிடுறான்… இன்னாது… அப்பா ஆவறதுக்கு மார்க்கா… அப்பா ஆவுறதெல்லாம் நம்ம பசங்களுக்கு ஜுஜிபி மேட்டர்… அதுக்கு மார்க்கெல்லாம் கிடையாது ஹி ஹி …

இதுல முக்கியமானது இன்னான்னா… ஒரு ஆண் நடுவுல வேலைங்கற அந்த 25 மார்க் வாங்கலன்னா கூட ஒண்ணியும் ப்ராப்ளம் இல்ல மச்சி! ஒரு ஃபிகர மடக்கிட்டாலே மத்த பொறுப்புல்லாம் தானா வந்துடும்… இதத்தான் ஆடுகளம் படத்துல காட்டியிருப்பாங்க! தனுஷ் வெட்டியா சேவல் மேச்சிக்கினு சுத்திக்கிட்டிருப்பாரு… ஆனா டப்சிங்கற சூப்பர் ஃபிகர் மடங்குனோன்ன மேச்ச சேவல கொழம்பு வக்க கேன்டீன் வக்க போவாரு… இது தான் மச்சி லைஃப்! அதனால தான் பசங்களுக்கு லைஃப்ல செட்டில் ஆவுறதுன்றது வேலை கிடைக்கிறது இல்ல… ஃபிகர் மடக்குறதுதான் ! அதுக்குத்தான் கண்ணு இந்த குப்பு இந்தப் பாடுபட்டு எயுதுக்கினு இக்குறேன்! ( ஹலோ… இனிமே சமுதாய பொறுப்பு இல்லாம நான் எயுதுறேன்னு யாரு சொல்லுவா ஹி ஹி )

சரி இப்போ நாம் இந்த தொடர்ல லைஃப்ல செட்டில் ஆக  ஃபிகரை மடக்குறது எப்படின்னுதான் பார்த்துக்கிட்டு இருக்கோம்.  ஃபிகர்ல பல டைப் பாத்துக்கினு இருக்கோம்…போனதபா க்ளிசரின் ஃபிகர்ஸ் பத்தி பாத்தோம்.. இப்போ அடுத்த டைப்பு…  முக்கியமான டைப்பு.. “சேஃப்டி ஃபிகர்ஸ்”  அதாவது பாதுகாப்பு தேடி அலையும் ஃபிகர்ஸ்… ஆதிகாலத்துலேர்ந்து பார்த்தா ஒரு ஆணை ஒரு பெண் தேடிப் போறதுக்கு முக்கியமான காரணமே இந்தப் பாதுகாப்புதான்! ஏவாள் இன்னாத்துக்கு ஆதாம் கூடவே சுத்திக்கினு இருந்தா.. ஆப்பிளுக்கா? ( ஆப்பிள் மேட்டர்லாம் அப்பால வந்துது கண்ணு!) இல்ல.. இந்தப் பாதுகாப்புக்காகத்தான்! அடிப்படையில் எல்லா ஃபிகர்ஸ்டயும் இந்த பாதுகாப்பு காம்பனென்ட் கொஞ்சம் இருக்கு. எல்லாரும் ஃபிகருங்க பைக்குக்காக மடங்குது காருக்காக மடங்குது அப்படின்னு தப்பா பேசுறாங்க! அது அப்படி இல்ல மச்சி! நீ வச்சிருக்கற உன் பைக்கு காரெல்லாம் வச்சி ஃபிகர் உன்ன ஜட்ஜ் பண்ணுது.. இவன் வருங்காலத்துல நம்மளயும் நம்ம குழந்தைகளையும் வச்சி நல்லா காப்பாத்துவான்னு மனுசுக்குள்ளயே ஒரு ஃபினான்சியல் ஸ்டெபிளிடி சர்டிஃபிக்கேட் போட்டுட்டு இருக்குது நம்ம ஃபிகர்! புர்தா உனக்கு?

அதனால இந்த மாதிரி “சேஃப்ட் ஃபிகர்ஸ்’ நம்ம கிட்ட ஜட்ஜ் பண்ற முக்கியமான விஷயம் நம்ம கிட்ட இருக்கற “பொறுப்புணர்ச்சியும் கடமையுணர்ச்சியும்” தான்! ( அதெல்லாம் இருந்தா நாங்க ஏன் உன் தொடர படிக்குறோம்னு கேக்குறீங்களா பாசு… அது ஃபிகருக்கு தெரியாம பாத்துக்குங்க பாசு.. அது போதும்!) . அதுக்காக எல்லா ஃபிகரும் பேங்க் ஸ்டேட்மென்டும் சேலரி ஸ்லிப்பும் பாத்துத்தான் லவ் பண்ணுதுன்றதெல்லாம் கெடயாது. ஃபிகர் நம்மாண்ட பாக்குறது “ஒரு ஸ்பார்க்”… இவன் நம்மள வச்சிக் காப்பாத்தக் கூடிய அளவுக்கு “ஒரு ஸ்பார்க்” இவனாண்ட இருக்கா? ன்றதுதான். ( ஃபிகராண்ட ஸ்பார்க் காட்டறேன்னு தம்ம பத்த வச்சிடாத மச்சி…)  ஆக இது போல “சேஃப்டி ஃபிகராண்ட” நமக்கு வாழ்க்கையில் ஒரு லட்சியம் ப்ளான்னிங் இருக்குன்னு காட்டுறது ரொம்ப முக்கியம். சரி பையன் வெட்டியா சுத்துனாக்கூட ஒரு ஐடியாவோடத்தான் சுத்துறான்னு ஃபிகர் நெனக்கணும். ( ஐடியா பண்ணி சுத்துறான்னு நெனக்குற அளவுக்கு டெலிபரேட்டா செய்யாம சாஃப்டா ப்ளே பண்ணு மச்சி !)

இந்த மாதிரி ஃபிகராண்ட நம்ம ஃப்யூச்சர் ப்ளான்ஸ் பத்தி டிஸ்கிஸ் பண்ணனும் மச்சி ( கிஸ்ஸெல்லாம் தானா நடக்கும் … நான் சொன்னது டிஸ்கிஸ்!) . “என் ஃப்யூச்சரே நீதான்!” போல ரொமாண்டிக் டயலாக்குல்லாம் இந்த மாதிரி சேஃப்டி ஃய்கர்ஸாண்ட வேலைக்காவாது.. உண்மையிலேயே எதுனா ஃப்யூச்சர் பளான் ரெடி பண்ணிக்கோ மச்சி !

கறுப்பா இருக்கற பசங்கள ஃபிகருக்கு புடிக்கலாம் ஆனா பொறுப்பா இல்லாத பையனை இந்த மாதிரி “ஸேஃப்டி” ஃபிகருக்கு புடிக்காது மச்சி ! பொறுப்பா மாறி பிக்கப் பண்ணு! “ஃபிகருக்கு புடிச்ச பின் சேஃப்டி பின் ஃபிகருக்கு புடிச்ச ஆண் சேஃபடி ஆண்!” அப்படின்னு ஒரு குறளே எயுதுனாரு வள்ளுவரு அப்பால அத்த எடிட் பண்ணிட்டாரு! அதனால சேஃப்டி ஃபிகராண்ட பொறுப்பா நடந்துக்கோ மச்சி!

அப்படியே க்ளிக் பண்ணி ஒரு ஓட்டப் போட்டுட்டு போ மச்சி…. உன் ஃப்ரன்ட்சுக்கும் ஃபார்வார்ட் பண்ணு.. ஏன்னா வருங்காலத்துல இதெல்லாம் சரித்திரத்துல வரப் போகுது… இலக்கியத்துல சேரப் போகுது… அடுத்த ஃபிகர் மடிக்கும் பார்டுல நெக்ஸ்டு மீட் பண்றேன்.. வர்ட்டா?

Advertisements