siruthai

சிறுத்தை படம் கார்த்தி முதன்முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கும் படம்… ஆந்திர ரீமேக்…

“காவலன்” “ஆடுகளம்” போன்ற படங்களோடு பொங்கலுக்கு போட்டியிட வந்திருக்கும் சிறுத்தை சீறிப் பாய்ந்திருக்கிறதா?

கதை : திருட்டை தொழிலாகக் கொண்டிருக்கும் ராக்கெட் ராஜா தமண்ணாவைப் பார்த்து காதல் கொள்கிறார். ஆனால் திடீரென கிடைக்கும் குழந்தை அவரை அப்பா என்கிறது. அந்தக் குழந்தையின் உண்மையான அப்பா ரதனவேல் பாண்டியன் என்கிற போலீஸ் அதிகாரி… அவர் என்று நினைத்து ஒரு கும்பல் ராகெட் ராஜாவை கொல்லப் பார்க்கிறது ஒரு கும்பல் காப்பாற்றப் பார்க்கிறது! இது எதுவுமே ஏனென்ன்று புரியாமல் தன்னிடம் கிடைத்த குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்கிறார் ராக்கெட் ராஜா.. குழந்தையின் உண்மையான அப்பா ரத்னவேள் பாண்டியன் ஆந்திராவில் இருக்கும் ஒரு கொடூர ரவுடியை எதிர்த்ததால் அவருக்கும் அவர்களுக்கும் தீரா பகை! அதில் அவர் இறக்க.. குழந்தையை கையிலெடுக்கும் திருடன் ராகெட் ராஜா ஆந்திராவுக்குப் போய் அந்த ரவுடிக்கும்பலை தன் “ஸ்பெஷல்” ஸடைலில் காலி பண்ணுவது தான் கதை!

நடிப்பு :

கார்த்தி :

துடுக்கான ராக்கெட் ராஜாவாய் நம்மை குபீர் சிரிப்பில் ஆழ்த்தும் கார்த்தி ! மிடுக்கான ரத்னவேல் பாண்டியனாய் நம்மை அதிர வைக்கும் கார்த்தி என இரண்டு வேஷங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்! காதல் காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார்… சந்தானத்துடன் வரிக்கு வரி டைமிங் மேட்ச் செய்கிறார். சூர்யாவிற்கு போட்டி வீட்டிலேயே தான்  !

சந்தானம் :

santhanam +  karthi

சந்தானத்துக்கு என்றே தைத்தது போல் ஒரு ரோல்.. மனுஷன் பின்னிப் பெடலெடுக்கிறார்.

கிக்கான பொண்ணா இருக்கேன்னு பாத்தா மக்கான பொண்ணா இருக்கே!

டேய்.. என்னை மெடிக்கல் ஷாப்புல திருட வச்சிட்டியே!

இப்படி வெடி டயலாக்ஸை சூப்பர் டைமிங்கில் வெளுத்துக் கட்டுகிறார்!

தமண்ணா : தமண்ணாவுக்கு நடிப்புக்கு சான்ஸ் குறைவென்றாலும் அவர் இடுப்புக்கு சான்ஸ் நிறைய… அவ்வப்போது அவர் இடுப்பைக் காட்டி மயக்குவது கார்த்தியை மட்டுமல்ல நம்மையும் தான்!

இவங்க மூணு பேரத் தவிர மீதி எல்லாருமே ஆந்திராவுலேர்ந்து எறங்குனதால யாரையுமே நமக்குத் தெரியல!

காமரா : வேல்ராஜ் அசத்தியிருக்கிறார்… பாட்டாகட்டும் ஃபைட்டாகட்டும் சேஸ் ஆகட்டும் ரொம்ப அழகாக படம் பிடித்திருக்கிறார்.

இசை : வித்தியாசாகர் . படத்தை தன் பாடல்களின் மூலம் தாங்கிப் பிடிக்கிறார்… ஜனரஞ்சகப் படத்துக்கு ஏற்ற ஜனரஞ்சக இசை !

இயக்கம் : சிவா… தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ஆனா ரீமேக் பண்ணாப்பலயே இல்ல… அப்படியே தெலுங்கு படத்தை தமிழ் வசனத்தோட பாக்குற மாதிரி இருக்கு…சிறுத்தை பார்க்கணும்னா லாஜிக் ரியலிஸம் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு உள்ள போகணும்.. போய்ட்டோம்…ஆனாக் கூட கதையையோ காட்சிகளையோ நெருடல் இல்லாம பாக்கவே முடியலயே… அவங்க அவங்க தமிழ் படத்தை முன்னோக்கி எடுத்துட்டுப் போக நீங்க ஒரு இருபது வருடம் பின்னோக்கி எடுத்துட்டுப் போயிட்டீங்களோன்னு தோணுது சிவா! அதுவும் அந்த கயித்து பாலத்துல தொங்குற க்ளைமேக்ஸ்… டூ மச் சிவா !

ப்ளஸ்:

டபுள் வெடி கார்த்தி

டைமிங் சந்தானம்

தமண்ணாவின் இடுப்பு ( ஹி ஹி)

ஆடவைக்கும் பாடல்கள்

மைனஸ் :

ஆந்திரா கார மிளகாய்

இழுவையான அரதப் பழசான கதை ப்ளஸ் க்ளைமேக்ஸ்

சிறுத்தை : ஆந்திர மிளகாயை காமெடி மிட்டாயுடன் கலந்து கொடுத்திருக்கிறார்கள்… மிட்டாய் இனித்தாலும் காரம் தான் கடைசியில் நாக்கில் உறுத்துகிறது!

சிம்பிள் வர்டிக்ட் : ஆவரேஜ் மச்சி!

[stextbox id=”alert”]வத்தி வாத்தியாரின் லேட்டஸ்ட் வத்தி : காவலன் படத்துல விஜயே திருந்தி ஆந்திர மசாலா கொடுக்காம இருக்காரேன்னு பார்த்தா கார்த்தி அடுத்த விஜய் ஆய்டுவார் போலிருக்கே![/stextbox]

Advertisements