பட்டினத்தாரின் தத்துவப்பாடல்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமையப் பெற்றிருக்கின்றன.அவரின் சில பாடல் வரிகளை இங்கே காணலாம்.

‘இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே

ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே-பருத்த தொந்தி

நம்மதென்று நாமிருப்ப,நாய் நரிகள் பேய்கழுகு

தம்மதென்று தாமிருக்கும் தான்’

வாழ்க்கையில் யாருக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற கருத்தை இப்பாடலில் எடுத்துரைக்கிறார்.

வாழ்க்கை இவ்வளவுதான் என்று சுட்டிக்காட்ட இப்படி ஒரு பாடல்  பாடுகிறார்,

‘பெயரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு

சூரையங் காட்டிடை கொண்டு போய் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப் பொழிவாரே!’

எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார் பாருங்கள்.மக்களின் துன்பத்திற்கு காரணம் மண்ணாசை,பொன்னாசை மற்றும் பெண்ணாசை தான் என்பதை தனது பாடல்கள் மூலம் உணர்த்தியுள்ளார்.அவரின் பாடல்கள் தொடரும்-

சைதன்யாவின் பட்டினத்தார் என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

diet-b.

Advertisements