மன்மோகன் - கலைஞர்

சமீபத்தில் மத்திய அரசு, அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தது. எல்லோருடைய எதிர்பார்ப்பும் என்னன்னா, தி.மு.க.வுக்கு எப்படியும் ஒரு இடம் இருக்கும், என்பது. ஏன்னா, தி.மு.க.வால், காலியான இடம் ஒன்று இருக்கிறதல்லவா?ஆனால், கொஞ்சமும் எதிர்பார்க்காவண்ணம்,அந்த இடத்தை தி.மு.க.,கேட்டுப் பெறவில்லை. வரப்போகும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்படியொரு திட்டமாம். காங்கிரஸ் தி.மு.க.விடம், அதிகமான இடங்களையோ ‘துணை முதல் மந்திரி’ போன்ற இக்கட்டான நிர்பந்தங்களையோ ஏற்படுத்தக்கூடாது. என்பதுதான் காரணமாம். கணக்கு என்னவோ, சரிதாங்க. ”நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வரேன் . ரெண்டு பேரும் ஊதி, ஊதித் தின்னலாம்.”என்கிற கதையாயிடக்கூடாது, பாருங்க!.

Advertisements