ஆன்மீக கேள்வி-பதில் பகுதி
———————–

தேங்காய் உடைப்பது

கேள்வி.1. சங்கம வழிபாடு என்றால் என்ன?

பதில்:-இறைவனிடம் தன்னுடைய சுய நலத்திற்காக மட்டும் வேண்டிக் கொள்ளாமல், பிறர் நலம் பேணுகின்ற முறையில், கூட்டுப் பிரார்த்தனையாகச் செய்தால், கண்டிப்பாக அருள்பாலிப்பார். இதனை ‘சங்கம வழிபாடு’ என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

கேள்வி.2.:-குல தெய்வ வழிபாடு முக்கியமா? ;  இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியமா?

பதில்:-நம் குடும்ப வழக்கப்படி குல தெய்வ வழிபாட்டையும், திருக்கோயில் வழிபாடுகளையும் செய்து வந்தால் போதுமானது. இஷ்ட தெய்வ வழிபாடு என்பது, ஒரு வேண்டுதலுக்காக ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட்டு வருவது. ஆனால், குல தெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானது.

கேள்வி.3:- கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

பதில்:-தேங்காய் உள்ளே பரிசுத்தமாக இருப்பதுபோல், மனதையும் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டவே கோவில்களில் தேங்காய் உடைக்கிறோம்!

************************************************************************************

[stextbox id=”info”]நீங்களும் ஆன்மீகம் பற்றிய உங்கள் கேள்விகளை jothidam@inthiya.in என்ற முகவிரிக்கு அனுப்பலாம்…[/stextbox]

Advertisements