ந்யூமராலஜி - கேள்வி பதில்

இன்றைய நாளில், ஜோதிடம் என்பது மூட நம்பிக்கைக்கு வழி வகுக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.எனவே ஜோதிடமெல்லாம் பார்க்காத மனிதர்களும் உண்டு. ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஜோதிடம் பார்க்காமல், எதுவுமே செய்ய மாட்டோம் என்று உறுதி கொண்டவர்களும் உண்டு. இன்னொரு வகையும் உண்டு. அதாவது, ஜோதிடத்தைப் பொய் என்று சொல்லிக்கொண்டே, ஜோதிடம் பார்ப்பவர்களும் உண்டு.

ஆனால், ந்யூமராலஜி என்பது சற்று மாறுபட்டது. இதை”நம்பர் சைன்ஸ்” என்றும் “‘மேத்தமேட்டிகல் கேல்குலேஷன்ஸ்” என்றும் வரிந்து கட்டிக்கொண்டு வாதிடுபவர்களும் உண்டு. எது எப்படி இருப்பினும், உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், இதைப் படித்துப் பயனடையும்படி கேட்டுக் கொள்கிறோம். ஆனால், வாசகர்கள!, உங்களுககு ஒரு சின்ன வேண்டுகோள். எந்தக் கட்டத்திலும், நீங்கள், உங்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. தெய்வ பக்தியும் விடாமுயற்சியும் இருந்தால், ஜோதிடமும் ந்யூமராலஜியும் நிச்சயம் கை கொடுக்கும். இனி, ந்யூமராலஜி சம்பந்தமாக வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பகுதியை ஆரம்பிப்போம்.

கேள்வி.(1):- அம்மா, என் ஊர் அம்பத்தூர். . எனது பெயர் ஆர். அம்பிகா. நான் பிறந்த தேதி 3.8.1986 .எனக்கு 24 வயது முடிந்து விட்டது. நான் இதுவரை வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதைப் பார்த்ததில்லை. தந்தையை சிறு வயதிலேயே இழந்துவிட்டேன். தாயும் 2 தங்கைகளும் உள்ளனர். நான்தான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு சிறிய கம்பெனியில் வேலை செய்கிறேன். அரசுத் தேர்வுகள எழுதியுள்ளேன். வாழ்க்கையில் வெற்றி பெற நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்:- உங்கள் பிறந்த தேதி 3. தியாகத்தைக் குறிக்கும் எண். நீங்கள்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சரியாகத்தான் சொன்னீர்கள். பிறந்த தேதி , மாதம் , வருடம் மூன்றையும் கூட்டினால், 8 வருகிறது. இந்தக் கூட்டு எண்தான் `விதி எண் எனப்படுகிறது. இந்த விதி எண்தான் இதுவரை சில தொல்லைகளைக் கொடுத்து வந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமடைய உங்கள் பெயரைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால், நல்லது. ‘ஆர். அம்பிகா’ என்ற பெயரைக் கூட்டினால், கூட்டுத் தொகை 4 என்று வருகிறது. உங்கள் பெயரைக் கூட்டினால், 5 வருகிற மாதிரி மாற்றி அமைத்துக் கொண்டால், துன்பங்கள் விலகும். உங்கள் ஊர் அம்பத்தூர் என்று சொன்னீர்கள். அதனால், ‘ஆர். அம்பிகா’என்பதை, ” ஏ. ஆர் அம்பிகா” என்று, மாற்றிக் கொண்டால், பெயரை கூட்டினால், 5 வரும். 5 என்ற எண் அதிர்ஷ்டமானது மட்டுமல்ல. மாற்றத்தைக் கொடுக்கக் கூடியதும் ஆகும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் அத்தனையும் மாறி ஒரு வெற்றியாளராக மாறுவீர்கள். ‘ ஏ. ஆர். அம்பிகா’ என்று ஒரு நாளைக்கு 14 முறை எழுதிப் பாருங்கள். வழ்க்கையில் எல்லா நலமும் உண்டாகும். வாழ்க! வாழ்க!
*****************************************

கேள்வி.(2):-என் சொந்த ஊர் கோயம்பதூர். என் பெயர் எல். ராஜேஷ். எனது பிறந்த தேதி,,2.10 1976 வியாபாரம் நொடித்துப் போனதால்,.கோயம்பத்தூரிலிருந்து, சென்னை வந்தும் 2 வருடங்கள் வாழ்க்கையில். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.என் குடும்பமும் கஷடப்படுகிறது. வாழ்கையில், முன்னேற ஏதாவது வழி காட்டுங்கள்.

பதில்:- உங்கள் பிறந்த தேதி ,மாதம்,வருடம் மூன்றையும் கூட்டினால், 26 அதாவது 8 என்று வருகிற்து. ராஜேஷ் என்ற பெயரில் கூட 17 அதாவது 8 தான் வருகிறது. இதுவே உங்கள் துன்பங்களுக்குக் காரணமாகிவிட்டது. ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள இனிஷியலையும் சேர்த்தால்,20 என்று வருகிறது. உங்கள் ஊர்களான கோயம்பததூர், சென்னை இரண்டிலும், ஆங்கில ‘சி’ என்னும் எழுத்து முதலெழுத்தாக வருகிறது, எனவே, “சி. எல். ராஜேஷ்” என்று மாற்றிக் கொள்ளுங்கள். கூட்டினால், 23 அதாவது 5 என்று வருவதால்,உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். புது இனிஷியலுடன், உங்கள் பெயரை தினமும், 23 முறை எழுதிப் பாருங்கள். வெள்ளை,வெளிர் மஞ்சள் முதலிய வண்ணங்களில் உடை அணிந்துகொள்ளுங்கள். மஞ்சள் புஷ்பராகமும் வெண்முத்துக்களும் சேர்த்து மோதிரம் அணிந்துகொள்ளுங்க்ள். மோதிரம் வெள்ளியில் செய்துகொள்ளலாம். முயற்சிகள் கைகூடும். வாழ்க வ்ளமுடன்!.
*****************************************

கேள்வி(3):- என் பெயர் ஆர். சங்கரன். நான் பிறந்த தேதி 4.10.1981. நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன் . கை நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால் பலவித நோய்களினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருகிறேன். 29 வயது தான் ஆகிறது. ‘ஷுகர்’ இருக்கிறது. வயிற்றில் ஒரு கட்டி இருக்கிறது . மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.மாத்திரைகளில் சரியாகவில்லை என்றால், ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும். நான் கஷ்டப்படும் இன்னொரு விஷயம் என்னவென்றால்,இரவில் தூங்கவே முடியாது. 12 மணிக்குமேல் தூங்கி, 3 மணிகுள் விழித்துவிடுவேன். அலுவலக வேலையிலும் தேவையான கவனத்தைக் காட்ட முடியாது. இந்தக் கஷ்டங்களுக்கு ஏதாவது விமோசனம் உண்டா?

பதில்:- உங்கள் பிறந்த தேதி ‘4’ .இது நோயைக் குறிக்கும். பெயரைக் கூட்டினாலும், ’22’ அதாவது, ‘4’ என்று வருகிறது. எனவே நோயே உங்களுக்கு வாழ்க்கையாகிப் போனது. தேவையானபடி பெயர் மாற்றம் செய்துகொண்டால், சரியாகிவிடும். நீங்கள், உங்கள் தாத்தாவின் பெயரையோ அல்லது ஊர்ப் பெயரையோ குறிப்பிடவில்லை. எனவே என்னால் இனிஷியலில் மாற்றம் செய்ய முடியவில்லை. உங்கள் தாத்தா பெயரிலோ அல்லது ஊர்ப் பெயயரிலோ, முதல் எழுத்து ‘பி'(ஏ’க்கு அடுத்து வரும் ‘பி’) . அல்லது,’ கே’ அல்லது, ‘ஆர்’ என்று வந்தால், அந்த எழுத்தை முதல் இனிஷியலாக்கி,,அதைத் தொடர்ந்து,”ஆர். சங்கரன்” என்று போட்டுக் கொள்ளுங்கள். (உ.ம். ‘கே.ஆர். சங்கரன்’).இது ஒத்துப் போகவில்லை என்றால், “ஆர். சங்க்கரன்”என்று போட்டுக்கொள்ளுங்கள். அதாவது, உங்கள் பெயரில் வரும் ஆங்கில எழுத்தான ‘கே’ வை, 2 முறை போட்டுக் கொள்ளுங்கள். பெயரைக் கூட்டினால் 24 என்று வரும். உங்கள் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வயிற்றில் ஆபரேஷன் பண்ணவேண்டிய அவசியம் வராது. இந்தப் புதிய பெயரை தினமும் 24 முறை எழுதிப் பாருங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ‘ஸ்ட்ரெஸ்’ ஸைக் குறைததுக் கொண்டால், ‘ஷுகர்’ குறையும். ப்ளூ,பச்சை, ஆரஞ்ச், வண்ணங்களில் உடை அணிந்துகொள்ளுங்கள். எமரால்ட் ராசிக்கல் மோதிரம் அணிந்துகொள்ளுங்கள். 6ம் எண்ணுக்குரிய கலகலப்பு உங்களைத் தொற்றிக்கொள்ளும். நோய்கள் உங்களைக் கண்டு வெருண்டு ஓடும். நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ்க.
**********************************************************************************

[stextbox id=”info”]

ந்யூமராலஜி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கீழ்க்கண்ட விவரங்களுடன் jothidam@inthiya.in  என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் …

பெயர் : (சரியான முழு ஸ்பெல்லிங்குடன்)

பிறந்த தேதி:

ஊர்:

வேண்டும் விவரம்:

[/stextbox]

Advertisements