இந்த வருடம் முதன் முதலாக வாக்காளர் தினம் , ஜனவரி 25ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் இது அனுஷ்டிக்கப்பட இருக்கிறது..எலெக்க்ஷன் நேரத்தில், தவறாமல், ஓட்டுப் போடுவோம். அதுவும் எந்த தூண்டுதலுக்கும் ஆட்படாமல், சுய சிந்தனையுடன் யோசித்து, ஓட்டுப் போடுவோம். என்றெல்லாம் உறுதிமொழி எடுக்கப்பட உள்ளதாம். இது, மிகவும் நன்மையான , நாட்டுக்குத் தேவையான விஷயம்தான். இன்னொரு விஷயமும் எங்க ஞாபகத்துக்கு வருதுங்க. வாக்காளருக்கு மட்டும் உறுதிமொழி போதுமா? வேட்பாளருக்கும் இது அவசியங்க. அப்ளிகேக்ஷன்ல உறுதிமொழி இல்லாம இருக்காது. நான் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால்,’ வேட்பாளர் தினம் ‘ என்றும் ஒரு தினத்தை அறிவித்து விட்டால், எல்லா மட்டங்களிலும் ஒரு ஜன நாயக விழிப்புணர்ச்சி ஏற்பட ஏதுவாகும்.
************************************************************************************

Advertisements