தை மாத ரத சப்தமி
******************


சிவ பெருமானுக்கும், பார்வதி தேவியின் தந்தை தட்சனுக்கும் தீராப் பகை இருந்தது. சிவபெருமானை அழைக்காமல், தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்ற பார்வதியையும் அமானப்படுத்தினான். கோபமடைந்த சிவன் தனது அம்சமாக, வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க, அனுப்பினார். வீரபத்திரர் 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்து, யாக குண்டத்தை அழித்தார். இதன் அடிப்படையில், 32 கைகளுடன், ‘ப்ரளய கால வீரபத்திரர்’ கோயில் பெங்களூரு கவிப்புரம் குட்டஹள்ளியில், எழுப்பப்பட்டிருக்கிறது. தை மாதம் ரத சப்தமிக்கு முதல் நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் ஏற்றுவர். அர்ச்சகர்கள் இருவர் மற்றும், வீரபத்திரர் வேடமணிந்த ஒருவர் என மூன்று பேர் குண்டத்திலிருந்து நெருப்பைக் கையில் அள்ளித் தட்டில் வைக்கின்றனர். அதில் தூபமிட்டு,வீரபத்திரருக்குப் பூஜை செய்கின்றனர். அதன்பின் மூவரும் பூக்குழி இறங்குவர். ரத சப்தமியன்று,வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருவார். வரும் பிப்ரவரி மாதம்,9,10 தேதிகளில் ரத சப்தமி விழா நடக்கிறது. பெங்களூருக்குச் சென்று பக்தர்கள் தரிசிக்கலாம்.

Advertisements