வாத்து போண்டா

வாத்து போண்டா என்றதும், சைவப் பிரியர்கள், என்னவோ, நிஜ வாத்தில் செய்யும் போண்டாவாக்கும் என்று யோசிக்கவேண்டாம். இந்த போண்டாவின் வடிவம்தான் வாத்து மாதிரி இருக்கும். குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் இருக்கும். விளையாட்டாகவே சாப்பிட வைக்கலாம்.
தேவையான பொருட்கள்:-உருளைக் கிழங்கு 250.கி. நைஸாக அறிந்த வெங்காயம்1-பச்சை மிளகாய் 2-கொஞ்சம் இஞ்சி-கருவேப்பிலை கொத்தமல்லி ;பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்; 1கேரட் ; 10 மிளகுகள். முதலியவை.(5 வாத்துகள் செய்ய முடியும்.)
உருளைக் கிழங்குகளை ஈசியாகப் பிசையும் அளவுக்கு வேக வைத்துகொள்ளவும். வெந்த கிழங்குகளை, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவுடன், பொடியாக அறிந்த வெங்காயம், பச்சை மிளகாய்,இஞ்சி கருவேப்பிலை,கொ த்தமல்லி முதலியவைகளைச் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவை, சிறிய கோலிக் குண்டுகள்போல் 5 உருண்டைகளும், அதைப் போல் 5 மடங்கு பெரிய சைசில் 5 உருண்டைகளும் உருட்டி வைத்துக் கொள்ளவும். பெரிய உருண்டைகளைக் கைகளில் வைத்து லேசாக உருட்டி ஓவல் ஸைசுக்கு கொண்டு வரவும். இப்ப ,அது பால்(பந்து) ஸைசிலிருந்து மாறி, குட்டி சிலிண்டர் ஸைசுக்கு வந்திருக்கும்.ஒரு பெரிய ஓவல் ஸைஸ் உருண்டையின் ஒரு முனையில் ஒரு சிறிய உருண்டையை வைத்து,ஒட்டி விடவேண்டும்.இப்பவே இது பார்ப்பதற்கு ஒரு வாத்து உருவத்துக்கு வந்திருக்கும். சிறிய உருண்டை, வாத்தின் தலை மாதிரியும், பெரிய சிலிண்டர் உருண்டை ,வாத்தின் உடல் மாதிரியும் இருக்கும்.சிலிண்டர் உருண்டையின் மறுமுனையை லேசாக கையால்,வாத்தின் வால் மாதிரி இழுத்து விட்வும். வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணையை ஊற்றவும் . எண்ணைய் காய்ந்த்தும், இந்த வாத்து வடிவத்தை, எண்ணையில் நன்றாக மூழ்கும்படி வைத்துப் பொரிக்கவும். நன்கு பொரிந்ததும் எடுத்து வைத்துக் கொள்ளவும் இதுபோல் எல்லா வாத்துக்களையும் பொரித்து வைத்துக் கொள்ளவும். வாத்தின் தலைபோல இருக்கும் சிறிய உருண்டையை முகம் மாதிரி பாவித்து, 2 பக்கமும் 2 மிளகுகளை அழுத்தி ஒட்டி வைக்கவும் 2 மிளகுகளும் வாத்தின் கண்கள் போலிருக்கும். கேரட்டை 2 இஞ்ச் நீளத்துக்கும், 1/2செ.மீ. அகலத்துக்குமாக வெட்டி, 2 மிளகுகளுக்கும் நடுவில் அழுத்தி சொருகி விடவும்.இது வாத்தின் மூக்கு மாத்ரி தோற்றம் கொடுக்கும். இப்போது வாத்து போண்டா ரெடி. குழந்தைகளுக்கு பார்க்க வேடிக்கையாகவும்,விரும்பி சாப்பிடத் தூண்டும்படியும் இருக்கும். விருந்தினர் வரும்போது பறிமானால், ‘எப்படி; எப்படி’ என்று கேட்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள்.

Advertisements