தேங்காய் அல்வா
****************

தேவையான பொருட்கள்:-முற்றிய பெரிய தேங்காய்,1;பச்சரிசி 50கி.;வெல்லம் 150கி.நெய் 50மி.கி.முந்திரிப் பருப்பு தேவையான அளவு; ஏலக்காய்.5..

செய்முறை:-.சுத்தம் செய்த அரிசியை 2 மணி நேரம் ஊற வைததபின் நைசாக அரைக்கவும். தேங்காயைத் துருவி ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியை அடுப்பில் ஏற்றி கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைத் தட்டிப் போட்டுக் காய்ச்சவும். பாகுபதம் வந்ததும், அரிசி தேங்காயைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை கெட்டியானதும் நெய் ,முந்திரிப் பருப்பைச் சேர்த்துக் கிளறி பக்குவம் வந்ததும் இறக்கவும்.தேங்காய் அல்வா ரெடி. குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரி, தேங்காய் முதலிய பொருட்களின் அளவைக் கூட்டி, தயார் செய்து கொள்ளலாம். தேங்காய் அல்வா சுவையானது மட்டுமல்ல; சத்தானது மட்டுமல்ல.செய்முறையும் சுலபமானது.

Advertisements