பட்டினத்தார் பலவிதமான பிறவித்துன்பப் பாடல்களைப் பாடி மக்களை எச்சரித்தார் என்றே சொல்லலாம்.அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று மக்களுக்கு எடுத்துரைத்து இறைவனை நினைக்கும்படி கூறினார்.

“நினைமின் மனனே !நினைமின்

மனனே !

சிவபெருமானை செம் பொனம்

பலவனை

நினைமின் மனனே !நினைமின்

மனனே !

அலகைத் தேரின் அலமரு காலின்

உலகப் பொய் வாழ்க்கையை

உடலை ஓம்பற்க”

‘பிறந்தன இறக்கும்;இறந்தன

பிறக்கும்;

தோன்றின மறையும்,மறைந்தன தோன்றும்;

பெருத்தன சிறுக்கும்,சிறுத்தன பெருக்கும்;

உணர்ந்தன மறக்கும்,மறந்தன உணரும்;

புணர்ந்தன பிரியும்,பிரித்தன புணரும்;

என்று பலவாறு பாடி இறைவனை நினையுங்கள் என்றார்.

பட்டினத்தார் பாடல்கள் தொடரும்…

ஸ்ரீ சைதன்யாவின் பட்டினத்தார் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

diet-b

Advertisements