வித்தியாசமாகச் செய்யப்படும் உணவு வகைகள் ,சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.அது ஆரோக்கிய உணவாக இருந்தால், இன்னும் நல்லது. அந்த வகையில், இரட்டிப்பு பலனைக் கொடுக்கும்,நான் இப்ப சொல்லித் தரப் போகும் உருளைக் கூடையில் மாதுளை.

உருளைக்கூடையில் மாதுளை
****************************
தேவையான பொருட்கள்:-உருளைக் கிழங்கு-500 கி.;சோளமாவு 200கி. மக்காச் சோள முத்துக்கள் 4 டம்ளர்;மாதுளை முத்துக்கள் 1 டம்ளர்.; எலுமிச்சைப்பழம் 2;மசாலா;எண்ணெய் ;உப்பு.
செய்முறை:-உருளைக் கிழங்கைத் துருவி, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் தனியாக வைக்கவும். பின்னர் அதனுடன் சோள மாவைச் சேர்த்துப் பிசையவும்.இந்தக் கலவையை, உலோக டீ -வடிகட்டியின் உட்புறம் இடைவெளியின்றிப் பூசி, கொதிக்கும் எண்ணையில் வைத்துப் பொன்னிறமாக மாறும்வரை பொரித்து ,ஸ்பூன் அல்லது வடைக் கம்பி உதவியுடன், நிதானமாகப் பிரித்து எடுக்கவும்.இது சிறிய பூக்கூடைபோல், காணப்படும். இதேபோல், மேலும் பல பூக்கூடைகள் தயார் செய்யவும். மக்காச் சோளத்தை வேகவத்துத் தண்ணீரை வடிகட்டவும்.அதோடு,மாதுளை,உப்பு மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து, உருளைக்கூடையில் நிரப்பவும்.எலுமிச்சைச் சாறு பிழிந்து கலவையின் மேல் லேசாக விடவும்.இதோ ,உருளைக் கூடையில் -மாதுளை ரெடி.இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.சத்தானதும்கூட.
———————————————————————————————————

Advertisements