கடவுளுக்கே கண்தானம் செய்த கண்ணப்ப நாயனார் அவதரித்த நம் தமிழ்நாட்டில் பிறந்த நாம் அனைவரும் நம் கண்களை தானம் செய்ய வேண்டும்.எனவே நாம் உயிருடன் இருக்கும் பொழுதே கண்தான உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.நம் நண்பர்கள் ம்ற்றும் சுற்றத்தாரிடம் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கண்தானம் யார் செய்யலாம்?

சிறுவயது முதல் எந்த வயதிலும் ஆண்,பெண் இருபாலரும் செய்யலாம்.ஏற்கனவே கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும்,கண்ணாடி அணிந்தவர்களும்,இரத்த அழுத்தம்,நீரிழிவு,ஆஸ்துமா நோயாளிகள் கண்தானம் செய்யலாம்.

கண்தானம் யார் செய்யக்கூடாது?

எய்ட்ஸ்,மஞ்சல் காமாலை,இரண ஜன்னி,புற்று நோய்,வெறிநாய்க்கடி,மூளைக்காய்ச்சல் ஆகியவற்றில் இறந்தவர்களின் கண்களைத் தானம் செய்யக்கூடாது.

*கண்தானம் செய்வதை எந்த மதமும் ,சட்டமும் எதிர்க்கவில்லை.

*கண்தானம் பெற இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

*ஒருவர் இறந்தவுடன் இமைகளை மூடி வைக்க வேண்டும்.தலையை சற்று உயர்த்தி வைக்க வேண்டும்.

*ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட்டு ,48 மணி நேரத்திற்குள் தேவைப்படுபவர்க்குப் பொருத்தப் படவேண்டும்.

இருக்கும் வரை இரத்த தானம் ,இறந்த பின் கண்தானம் என்று சபதம் எடுப்போம்.குறிப்பு:இந்தியாவில் மட்டும் கருவிழிகள் பாதிக்கப்பட்டு கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்போர் 25 லட்சத்திற்கும் அதிகம்.ஆண்டு தோறும் தேவைப்படும் கருவிழிகள் 1.5 லட்சம்[approximate values-கூடுதலாகவும் தேவைப்படலாம்].ஆனால் கிடைக்கும் கருவிழிகளோ 19 ஆயிரம் மட்டும் தான்.இப்படிப்பட்ட சூழலில் ,இறந்து போன நம் உறவினர்களின்,நண்பர்களின் கண்களை புதைக்கவோ,எரிக்கவோ அணுமதிக்கலாமா?கூடவே கூடாது.அவர்களின் கண்களை தானமாக பெற்று இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாமே…!யோசியுங்கள்…

diet-b

Advertisements