பிப்ரவரி மாதப் பலன்கள்
*********************

மேஷம்
*******

இந்த மாதம் சூர்யன் 10ம் இடத்துக்கு வருவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.தூங்கிக் கிடக்கும் சனியையும் கேதுவையும் தட்டி எழுப்பும். தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சிலருக்குத் திருமண வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வி, வீடு, வாகனம், நகை, திடீர்ப் ப்ராப்தி என விரும்பிய இட மாற்றம், வங்கிக் கடன் எல்லாம் கிடைக்கும். தந்தை மேன்மை அடைவார். மனபலம் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. எதிரிகளின் தொல்லையும் இருக்கத்தான் செய்யும்.குரு வழிபாடு சிறப்பைத் தரும். இந்த மாதம் ஒரு நல்ல செய்தி வரும்.

ரிஷபம்
*******

கணவன்- மனைவி உறவு சிறக்கும். சுப நிகழ்ச்சிகளும், வீடு வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படும் என்றாலும்,எதிரிகளின் தொல்லையும், உறவினர்களோடு மனஸ்தாபமும் ஏற்படும்.எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும் என்றாலும், சில சமயம் பண விரயம் ஆகவும் வாய்ப்புண்டு. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தன லாபமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு விபத்துகள் ஏற்படலாம். கேது வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுனம்
*******

கெட்டவனாகிய செவ்வாய்,எட்டில் போய்க் கெட்டுப் போவதால், கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம். புதிய வாகனம், புதிய தொழில், புது வீடு என அனைத்தும் அமர்க்களமாக அமையும். வேண்டிய இடமற்றம் வரலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும்.புகழும் அந்தஸ்தும் உயரும். எதிரிகளின் தொல்லை இருந்து கொண்டுதான் இருக்கும். வெல்லக்கூடிய வலிமைக்கும் குறைவில்லை. பீடைகள் ஒழியும் காலம். பிரயாணத்தில் விபத்துக்கள் நேரலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம்.நவகிரக வழிபாடு நன்மை பயக்கும்.

கடகம்
******

உங்களுக்கு இந்த மாதம் உச்சம் பெற்ற ராசி, ஜல ராசியான மகர ராசியாக இருப்பதனால், வெளிநாட்டு வர்த்தகம், சிறக்கும். களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் இருக்க, இந்த வீட்டுக்குரிய செவ்வாய் 7ல் உச்சம் பெற்று நிற்க,கணவன்-மனைவி, இருவரில் ஒருவர் கடல் கடந்து பிரயாணம் செய்யவோ, வெளி நாட்டில் சென்று இருக்கவோ, கருத்து வேற்றுமை காரணமாக,பிரிந்திருக்கவோ நேரும். இந்த மாதம் கொஞ்சம் சோதனையான மாதம். தேவையில்லாத வம்பு வழக்குகள் தேடி வரும். கௌரவம், அந்தஸ்து குறையும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். காது, வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்..பழைய கடன் அடைபடும்.பயணங்களின்போது எச்சரிக்கை தேவை. சுகமான வாழ்வு மலர சூர்யன் செவ்வாய் பரிகாரம் செய்யுங்கள்.

சிம்மம்
******

குடும்பத் தகராறு குறையும். கணவன்-மனைவி இடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். செவ்வாய்-சூர்யனின் சேர்க்கை மூலம்,தொழில், உத்தியோகம் சிறக்கும்.கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள், நடந்தேறும். இதுவரை தொல்லை ஏற்படுத்தி வந்த நோய்தீரும். மனபலம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.எதிபாராத பணவரவு கிடைக்கும்.. பணியில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.பூமி சேர்க்கை அமையும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். எல்லோரிடமும் நல்ல பெயர் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் பிறரால் பாராட்டப்படும். சனி, குரு வழிபாடு சங்கடங்கள் தீர்க்கும்.


கன்னி
******

எட்டுக்குரிய செவ்வாயும், பனிரெண்டுக்குரிய சூர்யனும் சேர்ந்து ஐந்தில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தை உண்டுபண்ணுவதால், ஒரு ஏத்து ஏத்தப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தாருடன் எந்த வாக்குவாதங்களிலும் ஈடுபடவேண்டாம். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் உதவிகளும் கிடைக்கும்.தொழில் காரணமாக வேறு ஊருக்குச் செல்ல நேரிடும். புதிய இடம் கூடுதல் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். உங்களை மேன்மையானவராக உயர்த்தும். தோல்விகளால் துவண்டு போயிருந்த உங்களுக்கு, வெற்றி வந்து, மகிழ்ச்சி தரப் போகிறது. அவ்வப்போது எதிரிகளால், தொல்லைகள் இருக்கும் என்றாலும், அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது. உடல் நலத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் உடல் நலத்திலும் கவனம் அவசியம்.. மருத்துவச் செலவுகள் ஏற்படும். புத்திரர்களால் சில பிரச்சினைகள் வரலாம். வீடு, மனை, நகை வாங்கும் யோகம் வரும்.உங்களுடைய செயல்கள் உங்கள் சாதுர்யத்தை வெளிப்படுத்தும். பலராலும் பாராட்டப்படுவீர்கள். சூர்யன், செவ்வாய் வழிபாடு உயர்வைக் கொடுக்கும்.

துலாம்
******

களத்திராதிபதியும், ராசினாதனுமான சுக்கிரன்,2ம் வீடான செவ்வாய் வீட்டில் அமர,அதே சமயம், செவ்வாய் 4ல் உச்சம் பெற்று மகர ராசியில் இருக்கிரான். இதனால், கடல் கடந்த யோகத்தை எதிர்பார்த்தவர்களுக்கும்,கல்யான வரனை எதிர்பார்த்தவர்களுக்கும்,இது ஒரு பொன்னான காலம். இதுவரை உங்களுக்குத் தொல்லை ஏற்படுத்தி வந்த எதிரிகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் ஓடிமறைவார்கள். மனதை வருத்திய துயரங்கள் தீரவும்,இழந்த மரியாதையை மீண்டும் பெறவும் உகந்த காலம் இது. வழக்குகளில் நன்மை பெற முடியும். சிலருக்குக் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் அதிகமாகும். தந்தை நலம் பெறுவார். நவக்கிரகத்தை வலம் வந்து வழிபட்டால், வாழ்வு சிறக்கும்.

விருச்சிகம்
**********

இதுவரை இருந்துவந்த உடல் நல பாதிப்புகள் நீங்கி, உடல் நலம் சிறக்கும். வேலையின் காரணமாக வெளியூரிலோ, அல்லது வெளி நாட்டிலோ இருப்பவர்கள், சொந்த ஊருக்கோ, சொந்த நாட்டுக்கோ திரும்ப நேரும். ராசினாதன் உச்சம் பெற்று தொழில்காரகனான சூர்யனோடு சேர்ந்திருப்பதால், பலவகையிலும் உங்களுக்கு லாபம் வந்து சேரும் மாதமாகவே இது இருக்கும். மனபலம் பெருகும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும். கணவன்-மனைவி உறவு இனிமையானதாக இருக்கும். விரும்பிய இட மாற்றம், பணிமாற்றம், தொழில்மாற்றம், புத்திர பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்.நவக்கிரக வழிபாடு செய்தால்,வாழ்வு சிறக்கும்.

தனுசு
******

உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்பம் -வாக்கு ஸ்தானத்தில்,நெருப்புக் கிரகங்களான சூர்யனும், செவ்வாயும் அமர்ந்திருப்பதால், குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பண வரவில் தடையும், வார்த்தையில் கோபமும் உண்டாகும். கணவன்-மனைவிக்கிடையில் வாக்குவாதங்களும் ஏற்படும். இந்த நேரத்தில் பொறுமையைக் கடைப்டிப்பது நல்லது. திருமண முயற்சிகள், இழுபறியாக இருக்கும்.விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம்,தொழில் மற்றும் வங்கி உதவிகள் தாமதப்படும். மாதப் பிற்பகுதியில், , கிரக மற்றங்களால் நிலைமை மாறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை குறையும். தாயார் மேன்மை அடைவார். முயற்சிகள் அனைத்திலும், புத்திசாலித்தனத்தை உபயோகித்து வெற்றி அடையலாம். கவனக் குறைவு ஏற்பட்டால், அவமானங்களுக்கு ஆளாக நேரும். கண் சம்பந்தம்ன பாதிப்புகள் ஏற்படும். நவக் கிரக வழிபாடு செய்தால், மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.

மகரம்
*****

உங்கள் ராசியில் செவ்வாயும் சூர்யனும் அமர்ந்திருப்பது இனம் புரியாத பதட்டத்தை ஏற்படுத்தும். 8ம் அதிபதியான சூர்யன், ராசியில் அமர்ந்திருப்பதால்,குறுக்கு வழிகளில் ஈடுபட மனம் தடுமாறும். மனக் கட்டுப்பட்டோடு இருந்தால், வீண் வம்புகளில் மாட்டிக் கொள்ளாமல், இருக்கலாம். மற்றபடி தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். புத்திரர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்ற நல்ல காரியங்கள் கைகூடிவரும். சிலருக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும்.வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயார் வழியில் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை நவக் கிரக வழிபாடு நன்மை பயக்கும்.

கும்பம்
******

உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில், தொழில் ஸ்தானாதிபதி செவ்வாயும், உபதொழில் ஸ்தானாதிபதி சூர்யனும் மறைந்துகாணபடுவதால், வியாபாரம், தொழில், உத்தியோகம் சம்பந்தமான முயற்சிகள் இழுபறியாக இருக்கும். இருந்தாலும் ஒரேயடியாக பயப்படத் தேவையில்லை. திருமண முயற்சிகள் வெற்றியடையும். விரும்பிய இடமாற்றம், பணிமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் உடல நலம் பாதிப்படையலாம். எதிரிகளின் தொல்லைகளும் புத்திரர்கல் சம்பந்தமான கவலைகளும் ஏற்படும். எதிரிகள்ன் தொல்லைகளும், வம்பு வழக்குகளும் தேடிவரும். மனபலம் குறையும். உடன்பிறந்தோருடன் சண்டை ஏற்படும். இருப்பினும், தொழில், வியாபாரம் மேன்மை அடையும். மாணவர்கள், தடைப்பட்ட கல்வியைத் தொடரவும் வாய்ப்புகள் உருவாகும். சனி, செவ்வாய், சூர்யன் வழிபாடு நல்ல வழியைக் காட்டும்.

மீனம்
*****

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 6ம் அதிபதியான சூர்யனும், தனபாக்கியாதிபதி செவ்வாயும் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிப்பது வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் ஏற்படும். ராசிக்கு 5க்கு 5ல் சுக்கிரன் அமர்ந்திருப்பது கணவன்-மனைவி உறவு அன்யோன்யமாக இருக்கும். பொழுதுபோக்கு அம்சங்களில் பங்கு பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இந்த மாதம், ஒரு நல்ல செய்தி வரும். தாய்வழி உறவுகள் மேம்படும். வாழ்க்கைத் துணை நலம் பெறுவார். சிலருக்கு வாகனச் சேர்க்கை ஏற்படும். கணவன்-மனைவி உறவு வலுப்படும். வருமானம் பெருகும். கொடுக்கல்-வாங்கல் சிறப்படையும். பழைய வழக்குகள் முடிவுக்கு வரும். நவக்கிரக வழிபாடு சிறப்படையும்.

Advertisements