தேவையான பொருட்கள்:

பைன் ஆப்பிள்-1

ஆப்பிள்-1

பப்பாளி-3துண்டு

மாதுளை முத்து-2கப்

பேரிக்காய்-1

ஆரஞ்சு-1

எலுமிச்சை சாறு-2tsp

ஆரஞ்சு சாறு-3tbsp

சிறிய பச்சை மிளகாய்–1[அ]மிளகு தூள்

தேவையான அளவு உப்பு[can use ground black salt also]

செய்முறை:

*பைன் ஆப்பிளை நீள வாக்கில் வகுந்து கொள்ளவும்.பிறகு அதனுள்ளே இருக்கும் சதைப் பகுதியை மெதுவாக ,தோல் பகுதி பாதித்துவிடாமல் எடுத்து[boat shape] சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

*ஆரஞ்சை தோலுரித்து,கொட்டை நீக்கி ஒரு துண்டு ஆரஞ்சை 2-3துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

*இதே போல் அனைத்துப் பழங்களையும் நன்றாக கழுவி தோல் சீவாமல் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

*மாதுளை முத்துகளுடன் நறுக்கி வைத்துள்ள அனைத்து பழங்களையும் ஒன்றாகக் போட்டு ,எலுமுச்சை சாறு,ஆரஞ்சு சாறு,பொடியாக நறுக்கிய ப.மிளகாய்,தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து நறுக்கி வைத்துள்ள பைன் ஆப்பிள் போட்டில் வைத்து பரிமாரவும்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.அழகுடன் மட்டுமில்லாமல் இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் என்று கலவையான சுவையுடனும் இருக்கும்.vitamin A,B,C மற்றும் நார்ச்சத்து நிறைந்ததும்கூட.

தொகுப்பு:diet-b

படம்:இணையம்

Advertisements