டைரக்டர் ஷங்கர் பற்றி நம்ம கற்பனையில் தோன்றின ஜோக்ஸ்

ரஜினி கமல் ரெண்டு பேரையும் வச்சு ஷங்கர் ” எல்லா அரசியல்வாதியும் ஏமாத்துனாலும் கண்டுக்காம இருக்கற மக்களைப்” பத்தி எடுக்கபோற அடுத்த படம் பேரு என்ன?

“எந்திர இந்தியன்”

ritheesh

ஏன் நம்ம் டைரக்டர் ஷங்கர் பயமா இருக்காரு?

நடிகர் ரித்தீஷ் காலையில ஃபோன் பண்ணி “த்ரீ இடியட்ஸ்” ஐ “ஃபோர் இடியட்ஸ்” ஆ மாத்திடுங்க … நானும் நடிக்கணும்னு அன்பா வேண்டுகோள் வச்சிருக்காராம்.

T.RAJENDAR

ஏன் விஜய்காந்த், சரத்குமார் , டி.ராஜேந்தர் மூணு பேரும் ஷங்கர் மேல கோவமா இருக்காங்க?

ஷங்கர் எடுக்கற “த்ரீ இடியட்ஸ்” படம் அவங்களப் பத்தின்னு யாரோ போட்டுக் குடுத்துட்டாங்களாம்…

PA.VIJAY

ஏன் இப்பல்லாம் டைரக்டர் ஷங்கர் கவிஞர் பா.விஜயை கண்டாலே ஓடுறாரு?

அதுவா… பா.விஜய் ஷங்கரப் பாத்து “தலைவர் இளைஞன் பார்ட் டூ கதையை எழுதி முடுச்சோன்ன உங்க கிட்டத்தான் பேசச் சொல்லியிருக்காரு”னு டெரர் குடுக்கறாராம்…

ANNAI OR ALAYAM

ஷங்கர் “அன்னை ஓர் ஆலயம்” படத்த ரஜினிய வச்சே ரீமேக் பண்ணப் போறாரா?

யோசிச்சாங்க… ஆனா யானைக்கு பதில் டைனோசர் வேணும்னு ஷங்கர் கேட்டதால ப்ராஜக்ட் ட்ராப் ஆயிடுச்சி!