பில்கேட்ஸ் இப்ப  கட்டுன  வீடு  இல்லங்க இது  .1988ம் ஆண்டு 2 மில்லியன் டாலருக்கு  ஒருடட்தைவாங்கி , 7 ஆண்டுகளாகத் தன் கற்பனை முழுதையும் செலுத்தி கட்டிய  வீடாம்  இது. இந்த வீட்டின் மதிப்பு  5 ஆண்டுகளுக்கு முன்பே  200 மில்லியன்  டாலருக்கு மதிப்பிடப்பட்டதாம்.     முகேஷ் அம்பானியின் வீட்டை ‘ஜுஜுபி’ என்னு  நினைக்கும் அளவுக்கு பில்கேட்ஸின் வீடு  இருக்குமாம். அரண்மனை மாதிரியான இந்த வீடு 66000 சதுரஅடியில் அமைந்துள்ளதாம்.  இந்த வீட்டின் மதிப்பு 5 ஆண்டுகளுக்கு  முன்பே 200 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டதாம். ஒவ்வொரு கதவின்  கைப்பிடியின்  விலைகூட 2000 டாலர்களாம். வீடு முழுவதும் ஆங்காங்கே   கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாம். ஒவ்வொரு அறையில் உள்ள மின் விளக்குகளும் அறையில் ஆள் இருந்தால் , தானாக எரியும். ஆள் இல்லாவிட்டால், அணைந்துவிடும். அத்தனையும் ஆட்டோமடிக்தான். பில்கேட்ஸின் ஆபீஸிலிருந்து கிளம்பும்  நேரம், பயணம் செய்யும்  கால அளவு  இ வற்றைக் கணித்து, அவருக்குத் தேவையான சூட்டில், வென்னீர் தயாராகும்  அளவுக்கு,  ஆட்டோமா டிக் சமாச்சாரங்களும் இந்த வீட்டில் உண்டு.  நீச்சல் குளம்  எப்படி இருக்கும்னு சொல்லணுமா?  இது 60 அடி நீளமும் 17 அடி அகலமும்  கொண்டதாம். இப்படி பரந்து விரிந்து கிடக்கும்  இந்த வீட்டை வீடுன்னு சொல்லமுடியாது.  பில்கேட்ஸின் அரண்மனையாக்கும் இது. !

Advertisements