பட்டினத்தாரின் பாடல்களை கவியரசு கண்ணதாசன் அவர்கள் எளிமைப்படுத்தி திரைப்பாடல்களாக ஆக்கித் தந்துள்ளார்.

பட்டினத்தாரின் ,

‘மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையூர் வாழாமற் கா’

என்ற பாடலை கண்ணதாசன் அவர்கள் முறையே,

‘பெற்றவள் உடல் சலித்தாள்

பேதை நான் கால் சலித்தேன்

படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா-பாவி

மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா’

என்று எளிமை படுத்தியுள்ளார்.[சரஸ்வதி சபதம்]

பட்டினத்தாரின்,

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே!விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மிவிம்மி இரு

கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு

மட்டே!

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!

என்ற பாடலை,

வீடுவரை உறவு,வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை,கடைசிவரை யாரோ”

என்று எளிமைப்படுத்தியுள்ளார்.[பாத காணிக்கை}

நிலையாமை பேசிய பட்டினத்தார் ,நிலைத்து நின்றார்.

பட்டினத்தார் பாடல்கள் தொடரும்…

தொகுப்பு:diet-b

Advertisements