பெனாசீர் பூட்டோ கராச்சியில் லார்கானா முஸ்லிம் குடும்பத்தில் 1953 இல் ஜூன் 21 இல் பிறந்தார்.

பெனாசிர்,பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோருடன்.அவர் தந்தை ஜூல்பிகர் அலி பூட்டோ, தாயார் நஸ்ரத் பூட்டோ ஆவர். இவர் பாக்கிஸ்தானின் முதல் மற்றும் இன்றுவரையிலும் ஒரே பெண் பிரதம மந்திரி ஆவார். இவர் கராச்சியில் உள்ல லேடி ஜென்னிங்க்ஸ் நர்சரி ஸ்கூல் மற்றும் கான்வென்ட் ஆஃப் ஜீஸஸ் அண்ட் மேரி ஆகியவற்றில் படித்தார். உயர்கல்வியை அமெரிக்காவில் தொடர்ந்தார்.

1969 முதல் 1973 வரை அவர் ஹேவர்ட் பல்கலைக்கழகத்திலுள்ள ரேட்கிளிஃப் கல்லூரியில் படித்தார். 2006 ஜூனில் டொரோன்டோ பல்கலைக்கழகத்திடமிருந்து மதிப்புமிக்க எலெல்டி பட்டம் பெற்றார். 1976 டிசம்பரில் அவர் ஆக்ஸ்போர்ட் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கௌரவம் மிக்க விவாத சமூகத்திற்கு தலைமை தாங்கும் முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றார்.

டிசம்பர் 18 இல் கராச்சியில் ஆசிப் அலி ஜர்தாரியை மணந்தார் .

இவருக்கு பிலாவல், பக்த்வார் மற்றும் ஆசிஃபா என்று மூன்று குழந்தைகள்.இரண்டாவது குழந்தையுடன் பெனாசிர்.

பெனாசிர் தனது 35 ஆவது வயதில் 1988 இல் முதன்முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜனாதிபதி குலாம் இழாக் கானின் உத்தரவின் கீழ் 20 மாதங்களுக்குப் பிறகு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 1993 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதி பரூக் லெஹரியினால் மீண்டும் 1996 இல் நீக்கப்பட்டார். 1989 இல் பெனாசிருக்கு லிபரல் இன்டெர்நேஷனலினால் சுதந்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான பாகுபாடு பிரச்சினை உட்பட பெண்களின் சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்காக பெனாசிர் அரசாங்கம் குரல் கொடுத்தது. அவர் கருக்கலைப்புக்கு எதிரானவர். தமக்கென சொந்த சமூக பண்பாடுகளைக் கொண்டுள்ள தனி நபர்கள் , சமூகங்கள் மற்றும் மதங்களின் மீது கட்டுப்பாடற்ற உடலுறவு, கருக்கலைப்பு, பாலியல் கல்வி மற்றும் இது போன்றவற்றைத் திணிக்க மேற்கு விரும்புவதாக அவர் குற்றஞ்சாட்டினார் .

புஷ் தம்பதியுடன் பெனாசிரும் அவர் கணவரும்.. பதவியில் இருக்கும் மற்றும் முன்னாள் பிரதம மற்றும் ஜனாதிபதிகளின் ஒரு வலையமைப்பான உலக பெண் தலைவர்களின் கழகத்தை நிறுவிய மற்றும் அதில் செயல்பட்டு வந்த ஒரு உறுப்பினராகவும் பெனாசிர் இருந்தார்.


பெனாசிரின் இறுதி நிமிடங்கள்…..2007 இல் டிசம்பர் 27 இல் ஜனவரி 2008 பாராளுமன்ற தேர்தல்களுக்கான போட்டியில் கட்சி ஆதரவாளர்களுக்கு ஓர் உற்சாகமான உரையை அளித்த பின்னர் லியாகம் நேஷனல் பாக்கில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சிக்கான ஒரு பிரச்சார பேரணிக்குப் புறப்பட்ட போது பெனாசிர் கொல்லப்பட்டார். துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதன் அவரை நோக்கிச் சுட்டான். ராவல் பிண்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் அவரின் சொந்த ஊரான சிந்தில் லார்கானா மாவட்டத்தில் உள்ள காரிகுடா பக்ஷிற்கு எடுத்துச் செல்லப்பட்டு குடும்பக் கல்லறையில் அடக்கப்பட்டது.

பெனாசிரின் பிறந்த நாளன்று இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் பெயரைச் சூட்டி பாக்கிஸ்தான் அரசு அவரை கௌரவித்தது.

பெனாசிர் பெயரால் வெளியிடப்பட்ட ஸ்டாம்ப்.

படங்கள் மற்றும் தகவல் விக்கிபீடியா..நன்றி

..ஷஹி..

Advertisements