ரோஷ்ணியின் லைலாக்கா வீடு
***************************

அந்த மாமரம் பசேல் என்று இருக்கும். எல்லாம் ரோஷ்ணியின் , கை வண்ணத்தால், விளைந்தவை. ஜில்லாக் குள்ளன் மரக் கன்றுகளும் பூச் செடிகளும் வாங்கிக் கொண்டு ஒரு நாள் வந்தான். அவனைத் திட்டி அவைகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு போய் வெளியே வீசிவிட்டு வா என்றாள் லைலாக்கா. ரோஷ்ணி அவளைத் தடுத்து நிறுத்தினாள்.’ ‘ரோஷ்ணி, இதெல்லாம் வெறும் குப்பைக்குத்தான் வழி வகுக்கும்.” என்றாள், லைலாக்கா. மறுத்தாள் ரோஷ்ணி. ”லைல்லாக்கா! நீ நினைப்பது போல் .குப்பையில்லை, இதெல்லாம்; பாத்துட்டே இரு. நம்ம வீட்டில் ஒரு பசுமைப் புரட்சி பண்றேனா, இல்லயா,பார்” என்றாள். லைலாக்காவும் விடவில்லை. ”செடியெல்லாம் பராமரிக்க வேண்டாமா? முதலில் தண்ணீர் ஊற்றுவது யார்?” என்றாள் லைலாக்கா. நீ பேசாமல் இரு. எல்லாம் நான் பாத்துக்கிற்ன் என்றாள், ரோஷ்ணி. அன்று முதல் நீர் ஊற்றி, சரியாக உரம் போட்டு வளர்த்ததெல்லாம் ரோஷ்ணியும் ஜில்லாக் குள்ளனும்தான். இன்று லைலாக்கா வீடு என்றால் அந்த வழியே போவோர் வருவோர் எல்லாம் ஒரு தடவை நின்று பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். ஒரு பெரிய சோலைக்கு நடுவே லைலாக்காவின் வீடு ஒரு குட்டி பங்களாவாக நிமிர்ந்து நிற்கும் அழகே அழகு. லைலாக்கா ஆரம்பத்தில், எதிர்த்தாலும் ,நாளடைவில், அதுவே ஒரு பெரிய பெருமிதமாகி விட்டது அவளுக்கு. மாமரத்தடியில் அமர்ந்திருந்த ரோஷ்ணி. அந்த மாமரத்தின் கதையை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டாள், ஜில்லாக் குள்ளனும் இதேபோலவே, ஏதோ ஒரு சிந்தனைவசப் பட்டிருப்பதைப் பார்த்தாள். அருகே சென்று ” என்ன விஷயம், என்ன கவலை?” என்று அன்புடன் கேட்டாள்”உன்னைப் பார்த்த பிறகு எனக்கு என்ன கவலை இருக்க முடியும்? என் யோசனை என்னன்னா, நாம இப்படியே சாப்பிட்டுத் தூங்கி எந்திரிச்சாப் போதுமா?வித்தியசமா ஏதாவது செய்ய வேண்டாமா?” என்றான். நானும் இதைத்தான் அடிக்கடி நினைக்கிறேன.சமூக சேவை ஏதாவது செய்ய வேண்டும். எவ்வளவோ ஏழைக் குழந்தைகள் சாப்பாடு இல்லாம, படிக்க வசதி இல்லாம இருக்காங்க! அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும். ”என்று ரோஷ்ணி சொன்னதும், மகிழ்ச்சியோடு ஆமோதித்தான். ஜில்லாக் குள்ளன். ”பணத்துக்கு என்ன செய்வது?”என்ற முக்கியமான கேள்வியை எழுப்பிய ரோஷ்ணியிடம்,” மனம் இருந்தால், மார்கமுண்டு. நாம ஏதாவது யோசிக்கலாம். உனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகலை?”என்ற ஜில்லாக் குள்ளனிடம் ”ம்…இதோ, கிளம்பிட்டேன. லைலாக்கா, ஸ்கூலுக்குப் போய்ட்டு, சாயங்காலம் அப்படியே வீட்டுக்குப் போய், தாத்து, பீப்பியைப் பாத்துட்டு வந்துடுறேன்” என்ற ரோஷ்ணியிடம் ‘ ‘சரி. அங்கேயே தங்கிடாதே. நீ இல்லேன்னா, எனக்குப் பைத்தியமே புடிச்சிடும். சீக்கிரமே வந்துடு.” என்றாள் லைலாக்கா’.சரி’ எனத் தலையாட்டிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள், ரோஷ்ணி.இரவு 7 மணிக்கெல்லாம் வர்ஷ்ணியைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.வர்ஷ்ணியைப் பார்த்தவுடன் எல்லோரிடமும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. பல்கி,ஜில்லாக் குள்ளன், இருவரும் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தனர். ரோஷ்ணி தாமதமானதில் கொஞ்சம் கவலையாக இருந்த லைலாக்காவுக்கும் வர்ஷ்ணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. வர்ஷ்ணியை ஆசையோடு தூக்கிக் கொண்டாள். ”வர்ஷ்ணி ,இங்கேயே ,இருக்கட்டுமே.” என்றாள். ”வர்ஷ்ணிகூட அதத்தான் சொல்றா.ஆனா, பீப்பிதான் உடமாட்டங்க. அவங்களூக்கு எங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சிருக்கறது பிடிக்காது. ஆனா, அப்பப்ப உடுவாங்க.” என்றாள் ரோஷ்ணி. இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே வர்ஷ்ணிப் பாப்பாவைப் பார்க்கும் ஆசையில் அருகில் வந்தனர், காட்டேரியானும், கண்ட இடியும். அதுவரை லைலாக்கா, ஜில்லாக் குள்ளன்,பல்கி மூவருட
ும் ,கை தட்டிச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த வர்ஷ்ணியும் காட்டேரியானையும், கண்ட இடியையும் பார்த்ததும் அலறிப் பயந்து ரோஷ்ணியின் மடியில் படுத்துக் கண்ணை மூடிக் கொண்டாள். லைலாக்கா அவர்கள் இருவரையும் விரட்டினாள். ”லைலாக்கா, லைலாக்கா!, நாங்களும் வர்ஷ்ணியோடு விளையாடணும்.” என்றனர் காட்டேரியானும்,கண்ட இடியும். ”குழந்தைகள் ,உங்களைப் பார்த்து விளையாடுறாப்லயா , நீங்க இருக்கிறீங்க,?” என்றாள், லைலாக்கா. அதற்குள் ரோஷ்ணி, வர்ஷ்ணியின் பயத்தைப் போக்கினாள். பலவாறு பேசிப் பயத்தைத் தெளிய வைத்தாள். வர்ஷ்ணியும் எல்லோருடனும் சிரித்து விளையாட ஆரம்பித்தாள். இப்படி மகிழ்ச்சி தவழும் அந்த வீட்டை இரண்டு கண்கள் மதில் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தன. இதை அறியாத ரோஷ்ணி முதலியோர் சாப்பிட்டுவிட்டு உறங்கப் போயினர். அனைவரும் துங்கிய பிறகும்கூட, ரோஷ்ணியும், ஜில்லாக் குள்ளனும் பேசிக் கொண்டிருந்தனர்.”ரோஷ்னி, பக்கத்துக் கிராமத்தில் ஒரு அனாதை ஆசிரமம் இருக்கிறது. நீ ஸ்கூலுக்குப் போன பிறகு, நான் அங்கே போய்ட்டு வந்தேன். நிறைய குழந்தைகள் இருக்கிறாங்க. அத்தனை பேருக்கும், ஒருவேளைதான் சாப்பாடு. அதுவும் கஞ்சிதான். ”என்று கூறிய ஜில்லாக் குள்ளனிடம்,ரோஷ்ணி, ”எங்க தாத்து எனக்கு ஒரு லட்சம் ரூபாய் தரதா சொல்லியிருக்காங்க. ஆனா, அது போதாது.முதல்ல, இத வச்சு ஏதாவது செய்யலாம். நாளைக்கு அங்கே போகலாம்.”என்றாள்.அவளுக்குத் தெம்பு கொடுக்கும் வகையில் பேச நினைத்த ஜில்லாக் குள்ளன், ”ரோஷ்ணி!, இன்னொரு விஷயம். நாளைக்கு, இங்க செட்டியார் திடலில் ‘மாடு- பிடிப் போட்டி நடக்கப் போவுது. ஜெயிக்கிறவங்களுக்கு 10 லட்ச ரூபாயாம்.இது மாதிரிப் போட்டிகள், இங்கே அடிக்கடி நடக்குமாமே!.இதக் கேட்டதும் எனக்குப் பெரிய தெம்பே வந்தது.எல்லாப் போட்டியும் ஒண்ணு விடாம ஜெயிச்சிட்டா நம்ம தேவைக்குப் பணம் கிடைச்சுடும்”.என்ற ஜில்லாக் குள்ளனிடம் ,”என்ன பேசுறே?ஜில்லாக் குள்ளா, நாம ஜெயிக்கிறதா?’ மாடு-பிடி’ன்னா என்னமோ எறும்பு புடிக்கிற மாதிரி பேசுறே. ஜெயிக்கிறவங்களுக்குத்தானே , பணம் தருவாங்க. நம்மளாலே முடியணுமில்ல?” என்றாள். ஜில்லாக் குள்ளனும் விடவில்லை. ”ஏன் ரோஷ்ணி, என்னப் பார்த்தா உனக்கு ஜெயிக்கிற மாதிரி தெரியலயா?.” என்றான். அவனது ஒரே அடி உயரத்தை ஒருமுறை ஏற  இறங்கப் பார்த்த ரோஷ்ணி, மேற் கொண்டு விவாதிக்க விரும்பாமல்,’ ‘சரி, தூங்கு.” என்றாள். ரோஷ்ணி , தன் பேச்சை நம்பவில்லைஎன்பதைப் புரிந்து கொண்ட ஜில்லாக் குள்ளனும் ரோஷ்ணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உறங்கிப் போனான். ஆ….னா…..ல்….உறங்காத இரண்டு கண்கள் மட்டும் காம்பவுண்டுச் சுவரோரமாக…..அந்த வீட்டையே உற்றுப் பார்த்தபடி இருந்தன. என்ன நடக்கும் என்று ஏதும் புரியாமல், பொழுது அது பாட்டுக்கு விடிந்தது.திடீரென்று அந்த ஏரியாவையே நடுங்க வைப்பது போல அந்த அலறல் சத்தம் கேட்டது.லைலாக்கா,ரோஷ்ணி,ஜில்லாக் குள்ளன் என அனைவரும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர். வாசலில் வந்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்ததும், ”ஆ………….!” வென அலறிய லைலாக்கா, தடாலென மயங்கி விழுந்தாள். ”ஏய்………..! ரோஷ்ணீஈஈ…..!” என்ற க்றீச்சொலியில் அந்த காட்டுப் பகுதியே கிடுகிடுத்தது.

(தொடரும்)

Advertisements