”கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன் வானமேறி வைகுண்டம போவானா?” என்ற ஒரு வசனம் உண்டு.  இந்தச் செய்தியைப் படித்ததும் இந்த வசனம்தான் என் நினைவுக்கு வந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே ஒரு வீட்டில் முகமூடி கொள்ளையர்கள், நகை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு இன்ஸ்பெக்டர், 3எஸ்.ஐ.கள், 8 சிறப்பு எஸ்.ஐ.களுக்கு மெமோ கொடுக்க எஸ்.பி. தினகரன் உத்தரவிட்டுள்ளார். ”போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே  இச் சம்பவம் நடந்துள்ளது. அன்றைய தினம் அமாவாசை என்று தெரிந்தும் ரோந்து செல்லாதது ஏன்?” என விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையல்லவா, இது?   இந்த நடவடிக்கை போலீஸாரிடையே தேவையான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதோடு, மக்களிடையே போலீஸின் மேல் மதிப்பு உயரும். தன் கண்ணுக்கெதிரில் நடக்கும் குற்றத்தை தடுக்கத் தெரியணும். அப்புறம்தான் சமூகத்தைக் காப்பாற்றுவது; இல்லையா? கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரிஞ்சாத்தாங்க, வானமேறி வைகுண்டம் போக முடியும்.

Advertisements