பைன் ஆப்பிள் இனிய சுவையும் ,மணமும் கொண்ட அழகிய பழம்.சாலை ஓரங்களில் வண்டி வண்டியாக கொட்டிக்கிடக்கும் பைன் ஆப்பிளில் லோடுலோடாக விட்டமின்ஸ்ம்,மினரல்ஸும் கொட்டிக்கிடக்கிறது.

*பைன் ஆப்பிளில் கால்சியம்,பொட்டாஷியம்,மாங்கனீஸ் அதிகளவில் இருக்கிறது.ஒரு கப் பைன் ஆப்பிள் சாப்பிட்டால்,நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மாங்கனீஸில் 73%இதிலிருந்து பெற்று விடலாம்.இச்சத்து நம் எலும்பை பலப்படுத்த உதவுகிறது.

*vit-c-யும்,நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.vit-c சக்தி வாய்ந்த anti oxidant-ம் கூட.நம் உடம்பில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

*பைன் ஆப்பிளில் அதிகளவில் காணப்படும் புரோமிலைன்[bromelain] என்கிற என்சைம் இருமலை குறைத்து,சளியை கெட்டிப்படாமல் நீர்த்துப் போகச் செய்கிறது.[suppresses the cough & loosen mucus],சீரண சக்தியை தூண்டுகிறது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பைன் ஆப்பிளை அப்படியேயும் சாப்பிடலாம்,பழச்சாறாகவும்,பதப்படுத்தியும் சாப்பிடலாம்.எப்பொழுதுமே எந்தப்பழமாக இருந்தாலும் ,அப்படியே fresh-ஆக சாப்பிட்டால் தான் அதில் இருக்கும் சத்துக்களின் முழுப்பயனையும் அடைய முடியும்.

தொகுப்பு:diet-b

படங்கள்:இணையம்

Advertisements