கோதுமைச்  சவடா

தேவை:-

கோதுமை  மாவும் ,  பாலும்   தலா  2  டம்ளர்  ;

நெய் 1/2 டம்ளர்;

ஏலப்பொடி;

முந்திரிப் பருப்பு;

கேசரிப் பௌடர்..

செய்முறை:-

பாலை  காய்ச்சி,   அ தில்   கேஸரிப்  பௌடர்  சேர்க்கவும்.  வாணலியில்  2  தேக்கரண்டி    நெய் விட்டு,  கோதுமை  மாவைச்  சிவக்க  வறுக்கவும்.  பின்னர், அத்துடன், சர்க்கரை   சேர்த்துக்  கிளறி  பாலை  சிறிது, சிறிதாக  ஊற்றி,கட்டி  பிடிக்காமல்,  கிளறவும். இத்துடன்  நெய்யைச் சேர்க்கவும். பிறகு, ஏலப்பொடி, முந்திரிப் பருப்பு சேர்த்துக்  கிளறி  இறக்கவும்.  சுவையான  கோதுமைச்  சவடா  ரெடி.

Advertisements