”திருடிட்டு  தலையாரி  வீட்ல  போய்  ஒளிஞ்ச மாதிரிதான்”என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. போலீஸ்  குற்றப்பிரிவில்  ஏட்டாகப்  பணியாற்றிவரும், முத்தழகன் என்பவர்,  தன்  வீட்டுக்கு, கூடுதல் மின்   இணைப்பு வேண்டி, ராஜா அண்ணாமலைபுரம், மின்வாரிய அலுவலகத்தில விண்ணப்பித்தார். அந்த அலுவலகத்தில்  பாஸ்கரன் என்பவர் பொறியாளராகப்   பணியாற்றி வருகிறார்.   இவர், முத்தழகனிடம், மின்  இணைப்பு  வழங்கக்  கூடுதலாகப்  பணம் கேட்டுள்ளார்.    கட்டணத்தை  மட்டும்    வாங்கிக்கொள்ளும்படி வற்புறுத்திய   முத்தழகனிடம், விண்ணப்பத்தைப்  பரிசீலிப்பதாகக் கூறி அதைக்  கிடப்பில் போட்டு  விட்டார், மின் பொறியாளர்.  திரும்ப வந்து     விசாரித்த  முத்தழகனிடம்,   பணத்தைக்  கொடுத்தால்தான்  இணைப்பு  வழங்குவோம்  என்று  உறுதியாகக் கூறியுள்ளார்  பாஸ்கரன்.. இதையடுத்து, லஞ்ச  ஒழிப்புத்துறையிடம்  புகார் அளித்த முத்தழகன், அடுத்தநாள்  பணத்துடன் மின் வாரியத்துக்கு   வந்து பாஸ்கரனிடம்    பணத்தைக்  கொடுத்துள்ளார். அப்போது  லஞ்ச   ஒழிப்புத்துறை அதிகாரிகள், பாஸ்கரனைச்  சுற்றி   வளைத்து  கைது செய்துள்ளனர்.

இப்படிக்கூட  நடக்குமாங்க?  அட, லஞ்சம்தான்  வாங்குறீங்க! போலீஸ்கிட்டயா போய்க்  கேட்பீங்க?  திருடிட்டு  தலையாரி வீட்ல ஒளிஞ்ச கதைதான் போங்க!

***********************************

Advertisements