உருளைக் கிழங்கு   தங்குளி

**********

தேவை:- உருளைக் கிழங்கு 1/2கி. ;சர்க்கரை 1/2கி.;நெய் 1/4கி.;முந்திரிப் பருப்பு 100கி.; பாதாம்  எசென்ஸ் .

செய்முறை:- உருளைக் கிழங்கை  வேக வைத்துத்  தோல்   நீக்கவும்.   1/2மணிக்கு  முன்பு  ஊற  வைத்த   முந்திரியை உருளைக் கிழங்குடன்   சேர்த்து  விழுதாக   அரைக்கவும்.   வாணலியில் சிறி து   நெய்  விட்டு   உருகியதும்,  உருளைக் கலவையைப்  போடவும்.  நிதானமான  தீயில்  2  நிமிடம்  கிளறியபின்,சர்க்கரையைச் சேர்க்கவும்.   இடையிடையே  நெய்   ஊற்றிக் கிளறிக்  கொண்டே  இருக்கவும். இறுகி வந்ததும், பாதம்  எசென்ஸ் விடவும்.  பாத்திரத்தில்  ஒட்டாமல்,  சுருண்டு  வரும்போது,  நெய்  தடவிய  தட்டில்  கொட்டித்   துண்டு  போடவும்.  இந்த   உ ருளைகிழங்கு   தங்குளி   மிருதுவாகவும்,   சுவையாகவும்  இருக்கும்.

*****************************

இன்ஸ்டன்ட்   ஊறுகாய்

***********

வீட்டில்   ஊறுகாய்  ஸ்டாக்  இல்லை. ஆனால், வரப் போகும்  விருந்தினருக்கு   ஊறுகாய் இருந்தால், தேவலாம்னு  தோணுதா? கவலை வேண்டாம். இதோ, நொடியில் ரெடி பண்ணிடலாம்.  ஸீசன் பற்றியெல்லாம் கவலைப் படத்  தேவையில்லாமல், எப்போதும்  எலுமிச்சம்பழம்  இருக்கவே  இருக்கும். 2 பழங்களை வெட்டி,  வாணலியில்  தண்ணீர்  ஊற்றி  வேக  வைத்துக் கொள்ளவும். நன்றாக வெந்து, தண்ணீர் வற்றியதும்  இறக்கி, வாணலியில்   எண்ணெய்  ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு  போட்டுத்  தாளித்து  அதில், எலுமிச்சம்பழத்தைப்  போட்டு  இளம்  தீயில்  கொஞ்சம்  எண்ணெய் விட்டு  வதக்கவும்.   இதற்கிடையில், 4 மிளகாய் வத்தலையும் கொஞ்சம் வெந்த்யத்தையும்  லேசாக வறுத்து பொடிக்கவும்.     இப்படிப்  பொடித்த மிளகாய்ப் பொடியை  தாளித்து வைத்துள்ள எலுமிச்சம்பழத்தில் கொட்டி கொஞ்சம்  தளர எண்ணெய் விட்டுக் கிளறி  இறக்கிவிட்டால்,  ”திடீர் ஊறுகாய்” ரெடி.

****************************

Advertisements