எதைச் சுற்றி  இந்த  உலகம்   சுத்துதுன்னு   நாம்  எல்லோரும்  நன்கு  அறிவோம்.   பணம்!    பணம்தான்  அது.  இல்லேன்னாலும்   கஷ்டம்;  ரொம்ப  இருந்தாலும்   அதைவிடக்   கஷ்டம். இப்போ   ப ணத்தைப்பபறறிய சில பழமொழிகளைப்   பார்க்கலாம்.

1.  பணம்  இருந்தால், உன்னை உனக்குத்    தெரியாது.   பணம்  இல்லாவிட்டால்   யாருக்கும்   உன்னைத்  தெரியாது.

2.   பணம்  அறிவாளிகளுக்குத் தொண்டு செய்யும்.    முட்டாள்களை  ஆட்சி   செய்யும்.

3. ஊதாரி  வருஙகாலப்   பிச்சைக்காரன்.  கஞ்சன்  என்றுமே  பிச்சைக்காரன்.

4. பணம்  பேசத்  தொடங்கினால்,  உலகம்   வாயை  மூடிக்கொ ள்ளும்.

5. பணத்தைக்  கொண்டு    நாயை  வாங்கிவிடலாம்.  ஆனால்,  அன்பைக்  கொண்டுதான், அதன்  வாலை  ஆட்ட  முடியும்.

6. சேரக்கூடாதவனிடம்  சேர்ந்தால்,  பணமும்   பதவியும் மோசமான  வியாதிதான்.

7. எப்படிப்பட்ட முட்டாளும்  பணத்தைச்  சம்பாதித்து   விடலாம்.

8. செல்வந்தனாக வேண்டும் என்று    நினைத்தால்,  அதன்  தாயாகிய  ஆடம்பரத்தை  முதலில் ஒழித்துவிடு.

9. திரைகடல்  ஓடியும்  திரவியம்  தேடு.

10. இல்லானை  இல்லாளும்  மதியாள்.

*********************************

Advertisements