1. முட்டை உசிலி.

தேவை:- முட்டை 4;  கடலை பருப்பு 50கி;  துவரம் பருப்பு  50கி; வெங்காயம் 100கி ; பச்சை  மிளகாய் 4; தாளிக்கத்  தேவையான அளவு  எண்ணெய் ; கொஞ்சம்   கருவேப்பிலை கொத்தமல்லி ;  ஒரு  சிறிய  துன்டு  இஞ்சி;  ஜீரகமும்  பெருஞ்சீரகமும் கொஞ்சம் ;  பிரிஞ்சி, பட்டை, கிராம்பு  தாளிக்கத்  தேவையான  அளவு;     தேவையான  அளவு  உப்பு.

செய்முறை:- 1/2  மணி  நேரம்   கடலைப் பருப்பையும், துவர ம்  பருபபையும்  ஊற  வைத்து ,  தவையான அளவு  உப்பு  சேர்த்து,  அரைத்து  வைத்துக்கொள்ளவேண்டும்.  வெங்காயம், பச்சை மளகாய்,   இஞ்சி  முதலியவற்றைப் பொடியாக  நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.  இவற்றோடு, அரைத்து  வைத்துள்ள  பருப்பு விழுதைப் போட்டுக் கலந்துவைத்துக் கொள்ள வேண்டும்.   இந்தக் கலவையை   இ ட்லித் தட்டுகளில்   வைத்து   வேக வைத்துக் கொள்ளவேன்டும்.  ஆறியபின்,   பொல பொலவென  உதிர்த்து  வைத்துக் கொள்ளவேண்டும்.  வணலியை அடுப்பிலேற்றி, எண்ணெய்  காய்ந்ததும்,  பிரிஞ்சி, பட்டை கிராம்பைப் பொடித்துப் போட்டு  த்   தாளித்து,  4 முட்டைகளையும் உடைத்து  ஊற்றி,  மிதமான  தீயில்  பொரித்து எடுக்கவும்.  இத்துடன், பருப்புக் கலவையைக் கலந்து   பொன்னிறமக வரும் வரை, லேசாக எண்ணெய் விட்டு   இளம்  சூட்டில், வதக்கி  இறக்க  வேண்டும். இதுவே  முட்டை  உசிலி   எனப்படும்  சுவையான   பொரியல்.   சைட் டிஷ்ஷாக   மட்டுமின்றி  மாலைச்  சிற்றுண்டியாகவும்  பயன்படுத்தலாம்.  குழந்தைகள்  விரும்பிச்  சாப்பிடுவார்கள்.

****************************************

2. சுறா மீன்  போண்டா

தேவை:- சுறா மீன் 1/2 கி. ; 50.கி. கடலை ப்  பருப்பு;  சாம்பார் வெங்காயம் 150.கி.; பச்சை மிளகாய் 4;  சிறிய துண்டு  இஞ்சி;  கொஞ்சம்  கருவேப்பிலை, கொத்தமல்லி; கடலை மாவு 200.கி. அரிசி மாவு 50.கி.;  தேவையாஆஆஅன அளவு  உப்பு;  பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை:- சுறா மீனை   வேகவைத்து ஆறியபின்   தோலை  உறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  கடலைப் பருப்பை  ஊற வைத்து,  உப்பு  சேர்த்து,  மிக்ஸியில்  கொர கொரப்பாக அரைத்து, இறக்குமுன்,  வேக வைத்த  சுறாமீனைப்  போட்டு   ஒரு அடி அடித்துக்  கலவை  நன்கு நைஸானவுடன்  எடுத்துப்  பொடியாக  நறுக்கப்பட்ட   இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இவைகளுடன்  சேர்த்து ப்  பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள  வேண்டும்.  கடலை மவு, அரிசி   மாவு இரண்டையும்    லேஸாக உப்பு  சேர்த்து, ( மீன் கலவையில்  உப்பு  இருப்பதை  மறந்துவிடக்  கூடாது.) இட்லி மாவு  பதத்துக்கு,   கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.   இந்தக் கரைசலில்,  மீன் உருண்டைகளை முக்கி எடுத்து,  வாணலியில்  காயவைத்த எண்ணெயில்  போட்டுப்   பொன்னிறமாகப்  பொரித்து  எடுக்க வேண்டும்.   இந்த சுறாமீன்  போண்டா  குழந்தைகளைத்  திரும்பத் திரும்ப   கேட்டுக்  கேட்டுச்   சாப்பிட வைக்கும்.   குழந்தைகளுக்கும்  பெரியவர்களுக்கும்  சரியான   நியூட்றிஷியஸ்  உணவாகும், இது.   மிகவும்  சுவையானதும் கூட!.

************************

3. முட்டைத் தொக்கு.

தேவை:-   வேக வைத்த  முட்டை3;  தக்காளி 1/4. கி. வெங்காயம் 150.கி.; மிளகாய்த்தூள்  ஒரு  தேக்கரண்டி; தேவையான அளவு  உப்பு. தாளிக்கத் தேவையான அளவு  எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு.

செய்முறை:-   வாணலியை  அடுப்பிலேற்றிக்  காய்ந்ததும், கடுகு  உளுத்தம் பருப்பு  போட்டுத் தாளித்து,   தக்காளி, வெங்காயத்தை  நறுக்கிப்   போட்டு, வதக்க வேண்டும்.  நன்கு வதங்கியதும்  மிளகாய்த்தூ,ள்,  உப்பு  சேர்த்து,  எண்ணெய் விட்டு, இளம்  தீயில்   நன்கு  வதக்க  வேண்டும்  எண்ணெய்  விட்டு விட்டு , வதக்க  நன்றாக  சுருண்டு வரும். இந்தச் சமயத்தில்  வேக வைத்த  முட்டைகளை இரண்டிரண்டாக  கட்  பண்ணி, அடுப்பில்  உள்ள  கலவையுடன் முட்டை  உடைந்து விடாமல்  மெதுவாகக்  கலக்க வேண்டும்.  தாமதிக்காமல்,  அடுப்பை  உடனே  அணைத்துவிட  வேண்டும்.   வாணலி  சூடு  ஆறும் வரை  வத்திருருந்துப் பிறகு இறக்கி வைத்துப்  பறிமாற வேண்டும்.  சாதத்துடன்  பிசைந்து  சாப்பிடவும்,  சப்பாத்திக்குத்  தொட்டுக்கொள்ளவும்,  நல்ல  சைட்  டிஷ்ஷாகவும்  பயன்படும்.  சுவையானது  மட்டுமல்ல;  எளிதில்  செய்யக்  கூடியதும்  ஆகும்.

***************************

Advertisements