ஆன்மீக கேள்வி பதில்

கேள்வி 1. :-.ஸ்ரீராமஜெயத்தை யார்;எங்கு; யாரிடம் எழுதிக் காண்பித்தார்?

பதில்:-அனுமன் அசோகவன சீதையிடம் ராமன் பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டு மணலில் எழுதினார்

கேள்வி2:-சிரஞ்சீவி என்றால் என்ன?

பதில்:-அழியா வரம் பெர்றவர் என்று பொருள்.

கேள்வி 3. :-அர்ஜுனனின் தேரில் இருக்கும் கொடி என்ன?

பதில்:- அனுமன் கொடி.

கேள்வி 4. :-சங்கடஹர சதுர்த்தி  பூஜையின் மகத்துவம் என்ன?

பதில்:- சதுர்த்தி, வினாயகருக்குப் பிரியமான  நாள்.  வளர்பிறைச் சதுர்த்தியில்  அவரை வழிபட்டால்,  நல்ல பலன்களை வழங்குவார்.  தேய்பிறைச் சதுர்த்தியில் வழிபட்டால்,ச ங்கடங்களைப் போக்குவார்.  ‘ஹர’ என்றால் போக்குதல். சங்கடங்களைப் போக்குவதால், சங்கடஹர சதுர்த்தி என்றானது.

கேள்வி  5.:- அர்ஜுனனின் தேரில் இருப்பது என்ன கொடி?

பதில்:-அனுமன் கொடி.

கேள்வி:- சங்கடஹர சதுர்த்தி பூஜையின் மகத்துவம் என்ன?

பதில்:-சதுர்த்தி வினாயகருக்குப் பிரியமான நாள்.வளர்பிறைச்  சதுர்த்தியில் அவரை வழிபட்டால், நல்ல பலன்களை   வழங்குவார்  . தேய்பிறைச் சதுர்த்தியில் வழிபட்டால், சங்கடங்களைப் போக்குவார். ‘ஹர’ என்றால் போக்குதல் என்று பொருள்.  சங்கடங்களைப் போககுவதால்,சங்கடஹர சதுர்த்தி என்று ஆயிற்று.தேய்பிறைச் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி.தேவர்களுக்கு அசுரர்களால், இன்னல் ஏற்பட்டபோது சங்கடஹர சதுர்த்தி பூஜை செய்து, தேவர்கள், வினாயகரை வழிபட்டனர். வினாயகப் பெருமான் மகிழ்வுற்று ,அசுரர்களை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.  கடன், நோய், வேலையின்மை, திருமணத்தடை, புத்திரப் பேறின்மை போன்ற சங்கடங்களை யும் போக்கவல்லது சங்கடஹர சதுர்த்தி பூஜை.

கேள்வி:- விடியற்காலை வாசலில் கோலமிடுவதற்குமுன் விளக்கேற்ற வேண்டுமா? அல்லது, விளக்கேற்றிய பிறகு கோலமிடுவதா?  கோலத்தில் மஞ்சள் குங்குமம் இடலாமா?வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடாமல், விளக்கேற்றுவது போன்று எதுவுமே செய்யக் கூடாது. அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும்.  கோலம் வீட்டிற்கு மங்கலத்தைத் தருகிறது. அரிசி மவை, எறும்பு காகம் குருவிகள் தின்பதால்,   ஜீவகாருண்யம் என்னும் புண்ணியம் கிடக்கிறது.மேலும், மஞ்சள்- குங்குமம் போன்ற  பூஜைக்குகந்த  பொருட்களை காலில் படும்படி கோலத்தில்  போடக்கூடாது. அழகுக்காக காவிப்பொடி இடலாம். கலர்ப்பொடிக் கோலம் தனியாகப் போடலாம். அரிசி மாவுடன் சேர்த்துப் போடக்கூடாது.

கேள்வி:- சர்ப்பத்துடன் இருக்கும் லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில்  வைத்துப் பூஜிக்கலாமா?

பதில்:- சர்ப்பம்  இல்லாத சாமி படங்களே இருக்காது. வினாயகர் பாம்பைப்  பூணூலாக அணிந்திருக்கிறார். .முருகன் மயிலின் கீழ் சர்ப்பத்தை வைத்திருக்கிறார்.  மாரியம்மன் போன்ற தெய்வங்களின் முடிமீது படமெடுத்த நாகம் இருக்கும்.  எனவே குழப்பிக் கொள்ளாமல், தாராளமாக வழிபடுங்கள்.    நாகம் என்பதுதெய்வங்களின் ஆபரணம் போன்றது.

************

Advertisements