கண் இமையின்  உட்புறம்  உறுத்தலும்  ,  கண்களில்  நீர்  வடிதலும்,  தலைவலியும்,  கண்கள்  சிவத்தலும்   ஏற்படும்  .  கண்களில்  பாக்டீரியாவோ   அல்லது  வைரஸோ  பரவியதின்  காரணமாகவே   கண்வலி  ஏற்படுகின்றது.    உடனே  டாக்டரை  அணுகி,  மருந்தினை  வாங்கிப்  பயன்படுத்தவேண்டும்.   வீட்டில்  இருக்கும்  கண்   மருந்தினை  எடுத்துப்  போடடுக்  கொள்ளக்  கூடாது.   கண்ணாடி  போட்டுக் கொள்வது  அவசியம்.  இதன்  மூலம்  மற்றவருக்குப்  பரவாமல்  தடுக்க  முடியும்.  ஒவ்வொரு  முறை  கண்களைச்  சுத்தம்  செய்யும்போதும்  கைகளைக்  கிருமி  நாசினி  போட்டுக்  கழுவ  வேணடும்.  கண்களை  ஒருபோதும்  கசக்கக் கூடாது.    சூர்ய  ஒளிக்கதிர்கள்  கண்ணில்  படாமல்  பார்த்துக் கொள்ளவேண்டும். தினமும்  காலை-மாலை  குளிப்பது  நல்லது.   உடலுக்குக்  குளிர்ச்சியான  பொருட்களைச்  சாப்பிட வேண்டும்.   அழுக்கான  துணிகளைக் கொண்டு  கண்களைத்  துடைக்கக்  கூடாது. சுடு  நீரில்  நனைத்துப்  பிழிந்த  டவல்  மூலம்  ஒத்தடம்  கொடுக்கலாம்.  சிலருக்குக்  கண்வலியைத்  தொடர்ந்து    காய்ச்சல்  ஏற்படும்.  அதற்கு  டக்டர்  ஆலோசனையின்பேரில்  மருந்து  சாப்பிடலாம். கண்வலி  மெல்ல  மெல்ல  சரியாகும்.  கண்வலி  சரியான பின்பும்  கண்களில்  கூசும்  தன்மை  ஏற்படும்.  இது,  இயல்பானதுதான்.   நாளடைவில்  சரியாகும்.

Advertisements