டான்சிலில் சீழ்.

சிறுவர்களுக்கு  டான்சிலில்  புண்   ஏற்படுவது  அதிகம். ஐஸ்க்ரீம்  சாபிட்டால்,    உடனே    தொண்டை  வலியும்  ,காய்ச்சலும்   ஏறபடும்.  இவ்வாறு  ஏற்படும்போது சுடு நீரில்   வாய்  கொப்பளித்தாலும்,  நோய்க்கு  ஏற்ற  மருந்தினைச்  சாப்பிடுவதாலும்  டான்சில்  நோயைக்  கட்டுப்படுத்தலாம்.    ஆனால்,  நோய்  சீரியசாகும்போது,  அறுவை  சிகிச்சை  தேவைப்படுகிறது.  சில  நேரங்களில்  டான்சிலின்  உள்ளே  சீழ்  சென்று  உள்பக்க  சீழ்க்  கட்டியை  ஏற்படுத்தும்.  சீழை  எடுத்து  விடுவதால்  மட்டும்  இந் நோய்   குணமாகிவிடாது.  டான்சிலின்  உள்பாகத்தில்  சீழ்  தேங்கி விடுகிறது.  இதனால்  அடிக்கடி  சீழ்க்  கட்டிகள்  வர  ஏதுவாகிறது.  இ ந் நேரங்களில்  டான்சில்  அறுவை  சிகிச்சை  செய்து   நோயை  முழுமையாகக்  குணப்படுத்திக்கொள்ளவேண்டும்.  சில   நேரங்களில்  புண்  ஏற்படும்போது  சீழ்  ஆடை  போன்று    டான்சிலின்  மீது  படிந்து விடுவதும்  உண்டு.  இ ந் நோயை  டிப்தீரியா  நோயிலிருந்து பிரித்து  அறிந்துகொள்ளவேண்டும்.  டான்சிலைச்  சுற்றியுள்ள   திசுக்களில்  அழற்சி   இருந்தால்,   டான்சில்  அறுவை  சிகிச்சை  செய்து  குணப்படுத்துவதுதான்  நல்லது.

Advertisements