தேர்தல் களம் தட்ப வெட்ப நிலை மாதிரி நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது. விஜ்ய்காந்த்  கட்சியின் மீதுதான் எல்லோருக்கும் கண். ஒரு கட்சி அவரைத் தனித்து நிற்கச் சொல்லி 1000 கோடி கொடுக்கிறார்களாம். இன்னொரு கட்சி தங்களுடன் வந்து விடச் சொல்லி, 400 கோடி தருகிறார்களாம். இன்னொரு கட்சி மூன்றாவது அணி அமைத்தால், தங்களுடன் வந்துவிடச் சொல்கிறார்களாம். நடிகருக்குத்தான் மவுசு ஏறிக்கொண்டே போகிறது. எல்லாம் ஒரு முடிவுக்கு வர இந்த மாத இறுதி ஆகிவிடும் போல இருக்கிறது.

ஆனால் திமுக அதிமுக இரண்டையுமே கலங்கடிக்கும் ஒரு சூப்பர் திட்டம் விஜய்காந்த் வசம் இருக்கிறது… ஐடியா கொடுத்ததே காங்கிரஸ் தான்… நடிகர் கட்சியும் அகில இந்தியக் கட்சியும், அவரவர் கூட்டணியில் இருந்து கிடைக்கிற சீட்டுகளை ஜெயித்துக் கொண்டு, எலெக்க்ஷன் முடிந்ததும் ஜோடி சேர்ந்து ஆட்சி அமைப்பது கூட திட்டத்தில் உள்ளதாம். ரெண்டு திராவிடத் தலைவர்களும் இதைக் கேட்ட பிறகு கூட்டணியில் இவர்களுக்கு எவ்வளவு சீட் கொடுப்பது என்று இன்னொரு முறை கலங்கிப் போயிருக்கிறார்களாம்… எப்படியோ  விருத்தகிரி காட்டில் ( பண ) மழை!

Advertisements