1.பூந்தி குருமா

தேவை:-காரா  பூந்தி 1/2 கப்; அரிந்த  வெங்காயமும்,  தக்காளியும்   ஒவ்வொரு  கப்;   உரித்த  பூண்டு பற்கள் 5  ;  இஞ்சி  பூண்டு  விழுது 1 டீ ஸ்பூன்;  மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்;   கரம்   மசாலாத் தூள் 1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்  2;  தேங்காய்ப் பூ  1/2 கப்;  முந்திரிப் பருப்பு  5; பொடியாக  நறுக்கிய  கரிவேப்பிலை  கொத்தமல்லி  கொஞ்சம்  ;  பிரிஞ்சிஇலை , பட்டை , லவங்கம்  கொஞ்சம்;  மஞ்சள் தூள்  1/2 ஸ்பூன்;    எண்ணைய்  3  ஸ்பூன்; உப்பு  தே வையான   அளவு.

செய் முறை:- அடுப்பில்  வாணலியை ஏற்றி   எண்ணெயைச்  சூடாக்கவும்.   காய்ந்த   எண்ணையில்,    பட்டை , லவங்கம்,  பி ரிஞ்சிஇ லை , வெங்காயம், தக்காளி   பூண்டு,  பச்சை மிளகாய்  கரிவேப்பிலை, கொத்தமல்லி   முதலியவைகளைப்   போட்டு    வதக்கவும்.  அத்துடன்,  இஞ்சி  பூண்டு விழுது, மிளகாய்த்  தூள்  மசாலாத் தூள்   முதலியவற்றைப்  போட்டுக் கிளறவும்.  தேங்காய்- முந்திரிப்   பருப்பைச்   சேர்த்து   அ ரைத்த விழுதை அத்துடன்  சேர்த்துப்  பிரட்டவும்.  மஞ்சள் தூளையும்  சேர்த்து,  4 கப்            தண்ணீர்  விட்டு   10 நிமிடம்   கொதிக்க   வி டவும். இத்துடன்  காரா பூந்தியைச்   சேர்த்து  இளம் தீயில்  10   நிமிடம்  கிளறி, க்ரேவி பதம்  வந்ததும்  இறக்கி, கரிவேப்பில  தூவி, பின்பு  பறிமாறவும்.  இது  புதுமையானதும் ,  சுவையானதும்  ஆகும்.

*************

உருளை ஆம்லெட்

2.உருளைக் கிழங்கு  ஆம்லெட்

தேவை:- உருளைக் கிழங்கு 450.கி. வேகவைத்துப்  பொடியாக  நறுக்கியது;  ஆலிவ்  ஆயில் 2 ஸ்பூன்;   வெங்காயம் 1 பொடியாக  நறுக்கியது;  முட்டை 6 ;உப்பு,  மிளகுத்தூள்  தேவையான  அளவு.

செய்முறை:-  வாணலி 10 ”   கனமுள்ள  நான்  ஸ்டிக்காக இருக்க வேண்டும்.   வாணலியை  அடுப்பிலேற்றி,  கொஞ்சம் எண்ணை விட்டுக் காய்ந்ததும்,  வெங்காயத்தைப் போட்டு , லேசாக   வதக்கவும்.    ஒரு பிஞ்ச் உப்பு சேர்க்கவும்.   இத்துடன், உருளைத்  துண்டுகளைச்  சேர்த்து , வாணலியை   லேசாகத்  தூக்கி  ஆட்டிக்,  குலுக்கி ஒன்று கலக்கும்படிச் செய்யவும்.   இப்படிச்  செய்வதால்,  உருளைத் துண்டுகள்  உடையாமல்,   இருக்கும்.   லேசாக  உப்பு  மிளகுத்தூள்  சேர்த்து,   அடுப்பிலிருந்து  இறக்கிவிடவும்.    ஒரு  பாத்திரத்தில்,  முட்டைகளை  உடைத்து  ஊற்றிக்   கலக்கி,  அதில்  உப்பு   மிளகுத் தூள்  கலந்து,   அத்துடன்  உருளைக் கிழங்கு  வெங்காயக்  கலவையைக்  கலந்து,   வைக்கவும்.    இப்பொழுது   முதலில்  சொன்னபடி  அடி  கனமுள்ள   வாணலியை    மறுபடியும்  அடுப்பிலேற்றி,   மீதமுள்ள  ஆலிவ்  ஆயிலை  ஊற்றி   மிதமாகச்   சூடாக்கவும்.    எண்ணை  ரொம்பவும்  காயக்  கூடாது.  லேசான  சூட்டில்,  கலந்து  வைத்துள்ள  முட்டை  – உருளைகிழங்குக்  கலவையை  ஊற்றவும்.     நான்- ஸ்டிக்  வாணலியை   இரு பக்கமும்  பிடித்து  லேசாக  அசைத்து, அசைத்து  முட்டைக்  கலவை  அடியில்    த ங்கும்படிச்  செய்ய வேண்டும்.   இப்போது  முட்டைக்  கலவை  அடியிலும்,  உருளைக்  கிழங்கு- வெங்காயக்  கலவை  மேலாகவும்  இருக்கும் .   தீயை  ரொம்பக்  குறைத்து  வாணலியை  மூடவும்.   10  நிமிடம்  கழித்துத்  திறந்து    தீயை  அணைத்துவிட்டு,   ஆம்லெட்  சரியாக  செட்  ஆகியிருக்கிறதா  என்று  பார்க்கவும்.   கொஞ்ச நேரம்    வாணலியிலேயெ  விட்டு  பிறகு  ஒரு  தட்டில்  வைத்து  நன்கு  ஆறியபின்  டைமன்ட்  ஷேப்பில்  துண்டுகள்  போட்டுப்  பறிமாறவும்.   இதை  மாற்றியும்   செய்யலாம்.  உருளைக் கிழங்குடன்  கேரட் ,  கீரை முதலியவற்றைச்  சேர்த்தும்  செய்யலாம்.   இந்தப்  புது  மாதிரியான  ஆம்லெட்டை  குழந்தைகள்  மிகவும்  விரும்பிச்  சாப்பிடுவார்கள்.

Advertisements