சுஜாதா அறக்கட்டளை உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா விருதுகள் 2011.

தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும்  5  விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

1.சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதை தொகுப்பிற்கு ,

2.சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு ,

3.சுஜாதா கவிதை விருது: சிறந்தகவிதைத் தொகுப்பிற்கு,

4.சுஜாதா உரைநடை விருது : சிறந்த கட்டுரை தொகுப்பிற்கு ,

5.சுஜாதா இணைய விருது : சிறந்த வலைப் பதிவு( blog) அல்லது இணைய இதழுக்கு (website)

6.சுஜாதா சிற்றிதழ் விருது : சிறந்த சிறு பத்திரிக்கைக்கு .

விதிமுறைகள் :

1. முதல் நான்கு பிரிவுகளில் 2009 டிசம்பர் முதல் 2010 டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் வெளிவந்த நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ , பதிப்பாளரோ , அல்லது வாசகர்களோ கூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப் பற்றி தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையத்தளத்திற்கு வழங்கப்படும் . அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி (link) களையும் அனுப்ப வேண்டும். அனுப்பவேண்டிய முகவரி : sujathaawards@gmail.com

3. ஆறாவது பிரிவில் தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களில் இருந்து பிரதிகள் அனுப்பப்பட வேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப் பட்டிருக்க வேண்டும் . அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழ்களில் இருந்தும் மூன்று பிரதிகள் வீதம் அனுப்ப வேண்டும்.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முன்னனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களால் மேற்கொள்ளப்படும் .

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி த்தேதி: மார்ச் 20 2011( 20/3/2011).

6. விருதுகள் மே 3 , 2011 ( 3/5/2011) சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும் .

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : சுஜாதா விருதுகள் , உயிர்மை , 11/ 29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -600018. மின்னஞ்சல்: sujathaawards@gmail.com

தொலைபேசி: 91-44-24993448.