அழகிரியை வட்டமிடும் காந்தம்!

டெல்லி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த விஜய் காந்த் ,” ஜெயலலிதா தன்னை மிகவும் அன்டர் எஸ்டிமேட் பண்றார். இப்ப நான் தி. மு. க. கூட்டணிக்குப் போக முடியாதா, என்ன? என்று பேசியிருக்கிறார். இது ஒருவேளை மிரட்டலாக்கூட இருக்கும்னு நினச்சாங்களாம். ஆனா , விஜயகாந்த்தின் அடுத்தடுத்த மூவ்கள் வேறுவிதமா யோசிக்க வைக்குதாம். மதுரையிலிருக்கும் விஜயகாந்த்தின் அக்கா தூதுவிட , அழகிரி பார்ட்டியும் உஷாராகி சுறுசுறுப்படைஞ்சிட்டாங்களாம். டாக்டர்களான விஜயகாந்த்தின் அக்காவையும், அவர் கணவரையும் அழகிரி அழைத்துப் பேசியிருக்கிறாராம். அ. தி. மு. க. கூட்டணியில் ஜெயிச்சாலும் , ஜெயலலிதா நம்ம கட்சியைச் சிதைச்சிடுவார்ங்குற பயத்திலிருக்கும் விஜயகாந்த் பார்ட்டியும், பா. ம. க. வைத் தொங்குவதற்கு பதிலா இது பெட்டர் என்ற முடிவுக்கு வ்ரலாமா என்ற யோசனையிலிருக்கும் அழகிரி பார்ட்டியும் பேச்சு வார்த்தை ஆரம்பிசசிட்டாங்களாம். விஜயகாந்த் தரப்பு 50 சீட்டும், தேர்தல் செலவையும் டிமாண்ட் பண்ண , பா. ம. க. வுக்குத் தர இருந்த 30 சீட்டும், தேர்தல் செலவும்னு அழகிரி தரப்பு பேச்சை ஆரம்பிக்க , இப்படியாகத்தானே போய்க்கிட்டிருக்குதாம், பேச்சு வார்த்தை. இதைத் தெரிந்துகொண்ட ஜெ. ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.

இதற்கிடையில், கலைஞரைச் சந்தித்துப் பேசக் காத்திருக்கும், ராமதாஸ்- அன்புமணியைக் கொஞ்சம் வெய்ட் பண்ணச் சொல்லியிருக்கிறாராம் கலைஞர்.
****************

சீமான் வெர்ஸஸ் காங்கிரஸ்…….!

அ.தி.மு.க. வுடன் கூட்டு சேர்ந்து, பொது வேட்பாளரா களம் இறங்க சீமான் ரெடியாயிட்டாராம். முதலில் காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பதுன்னு முடிவெடுத்திருந்தார், சீமான். ஆனால்,காமன்வெல்த் போட்டி ஊழல் , ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் குறித்தெல்லாம் கைது நடவடிக்கைகள் இல்லாதபோது, ஆ. ராசா மட்டும் கைதாகியிருப்பதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதா சீமான் நினைக்கிறாராம். எனவே, காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் மட்டும் தனி மேடை போட்டு எதிர்ப்பதுன்னு முடிவெடுத்திருப்பதா பேச்சு அடிபடுதுங்க.

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் திட்டம்………!?

காங்கிரஸ் கூடாரம் என்ன பண்ணுதுன்னு பார்த்தோமுன்னா ஒண்ணும் சேஞ்ச் இல்லங்க. 100 சீட்; இல்லன்னா ஆட்சியில பங்கு!
இன்னொன்னு சொன்னேன்னா ஒங்க பூஞ்ச மனசு தாங்காதுங்கோ! தி. மு. க. கூட்டணியில் காங்கிரஸ் ஜெயிச்சு , கிடச்சத தேத்திக்குமாம். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு. தி.க. ஜெயிச்சு கிடச்சத தேத்திக்குமாம். தேர்தல் ரிஸல்ட்டுக்கப்புறம், ரெண்டும் சேர்ந்து ஆட்சி அமைக்குமாம். தேவை ஏற்படும் பட்சத்தில் சில உதிரிக் கட்சிகளைச் சேர்த்துக்குமாம். எப்ப்டிப் போகுது பாத்திங்களா , அரசியல்? நாந்தா((ன்) முதல்லயே சொன்னனேங்க; தேர்தல் கள தட்ப வெப்பம் நாளுக்கு நாள் மாறிக்கிட்டே இருக்கும்னு!

Advertisements