தி மெக்கானிக் – விமர்சனம் – The Mechanic – Review

தி மெக்கானிக் - விமர்சனம்

நடிப்பு :

ஜேசன் ஸ்டெட்தம்

ஜேசன் ஸ்டெட்தம்

பென் ஃபாஸ்டர்  ( Ben Foster ), டொனால்ட் சுதர்லாண்ட் ( Donald Sutherland ), டோனி கோல்ட்வின் ( Tony Goldwin) ,  மினி அண்டென் (Mini Anden )
இயக்கம் : சைமன் வெஸ்ட் ( Simon West)
கதை : கார்ல் (  Carl)

மெக்கானிக்

கதை : ஜேசன் ஸ்டெட்தம் யார் என்ன கொலை செய்ய சொன்னாலும் செய்வார் … காசுக்கு…சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் இல்லாமல்  ஆனால் அவர்
வாழ்க்கையில் முதல் முறையாக தனியாக பழி வாங்கப் போகிறார்… ஏனென்றால் அவரின் குருவான டொனால்ட் சுதர்லாண்ட் கொல்லப்படுகிறார் … ஆனால் பழி வாங்கப் போகும்போது… சுதர்லாண்டின் மகன் பென் ஃபாஸ்டர் தன்னையும் பழி வாங்கும் படலத்தில் சேர்த்துக் கொள்ளும்படியும்… அப்படியே தொழிலையும் சொல்லித் தெரும்படியும் கேட்கிறார்… ஜேசனால் தட்ட முடியவில்லை… இருவரும் சேர்ந்து பழி வாங்கப் புறப்படுகிறார்கள்…

ஆனால் அதில் ஆயிரம் சதி வலைகள்…அவர்கள் வைத்த ஆளே… அவர்களை காலை வாரி விட அந்த சதிகளை முறியடித்து இருவரும் கும்பலின் தலைவன் டோனி கோல்ட்வின்னை போட்டுத்தள்ளுவதுதான் கதை.

பிளஸ்

ஆரம்பம் முதலே ஆக்ஷனில் அசத்துகிறார்கள்… நீட்டான திரைக்கதை… சூப்பரான கேமரா…

மைனஸ்

ஆனாலும் கூட 1972 வெளிவெந்த சார்ல்ஸ் ப்ரான்சன் ஒரிஜனலைப் போல இல்லை .

சூப்பர் சீன்ஸ் :

ஸ்டெட்தம் ஒரு கும்பல் தலைவனை ஸ்விம்மிங்க் பூலில் கொன்றுவிட்டு அவன் நீச்சலடிப்பது போல் கை கால் ஆட்டுவது

அந்த வேனும் காரும் மோதும் கிளைமேக்ஸ்

பாக்கலாமா : ஆக்ஷன் பிரியரகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

Advertisements