1. உயிர்  கூடவா…. அலட்சியம்…?

சென்னையிலுள்ள    பெரம்பூரில்   உள்ள   ஒரு   தனியார்  மருததுவமனையில்  10  நாட்களாக  அட்மிட்  ஆகியிருந்த 10  வயது  சிறுவனுக்கு புதன்கிழமை    ஒரு  ஆபரஷன செய்யப்பட்டதாம்.  ஆபரேஷன்  முடிந்து   கொஞ்ச நேரத்திலெல்லாம்  சிறுவன்  இறந்துவிட்டானாம்.  இதற்கு   டாக்டர்களின்   அலட்சியம்தான்  காரணம்  என்று  உறவினர்களும்  பெற்றோர்களும்  ஹாஸ்பிடலை  அடித்து  நொறுக்கினார்களம்.  போலீஸ்    விசாரனை  நடக்கிறது. கேஸ்  ஷீட்களைப்  பறிமுதல்  செய்ததோடு  உடலை  ஸ்டேன்லி   மருத்துவமனைக்கு   போஸ்ட்மார்டெம்   செய்ய அனுப்பியிருக்கிறார்கள்.    எக்ஸ்பெர்ட்  ஒபீனியனுக்காக  டி.எம். இ .க்கு   ரெபெர்  செய்திருக்கிறார்கள்.   உயிர்  திரும்ப வராது  என்றாலும்,  கவனக்  குறைவு  தண்டிக்கப்படவேண்டும்.  டாக்டர்களே!  உங்கள்  ‘அலட்சிய அதிகாரத்தில்’  இது  இன்னுமொரு  மைல்கல் போலும்!

2. சமீபத்தில்  தூக்குப் போட்டு இறந்துபோன   கல்லுரி மாணவியின்  துயரம்  ஆறுவதற்குள்ளாகவே, இன்னொரு  துயர  சம்பவம்  நடந்து விட்டது.   சென்னை  புளியந்தோப்பு  பகுதியில்  வாழும்  தேன்மொழி (வயது  13) எனும்   மாணவி  அதே  பகுதியில்    உள்ள  ஒரு  மாநகராட்சிப்  பள்ளியில்    படித்து வந்தார்.  செவ்வாய்க்கிழமையன்று   ஆங்கிலப் பரீட்சையை   சரிவர  எழுத முடியவில்லையாம்.  இவருக்கு   அம்மை   போட்டிருந்ததால்,   கொஞ்ச  நாள்  பள்ளிக்கு  வர முடியாமல்  இருந்ததால்,   சரிவர  எழுத  முடியாமல்,   ‘கைடை’ப்   பார்த்து  பரீட்சை  எழுதிவிட்டராம்.  இதைக்  கையும்  களவுமாகப்  பிடித்து விட்டாராம்  வகுப்பாசிரியை.  மற்ற மாணவிகள்  முன்னிலையில் இது  நடந்து விட்டதால்,  மனமுடைந்த மாணவி  தற்கொலை  செய்து கொண்டுவிட்டாராம்.   ஆசிரியை  மீது  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாம்.    மாணவிகளின்  தற்கொலை  இப்படி  தொடர்கதையானால்,  பெற்றோர்களின்  கதி  என்ன?    வாரிக்கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதான்!  சொல்லாமல்  கொள்ளாமல்  பயணம்  புறப்பட்டுவிடும்  மாணவிகளே,!   உங்களுக்கு  நடக்க  சொல்லித்தந்தாங்க   ;  படிக்க சொல்லி த்தந்தாங்க.  ‘பறக்க’  யாருங்க  சொல்லித்  தந்தா?  நீங்க  போனப்புறம்  உங்க பெற்றோர்   படும்    பாட்டை  நினைக்கலியா?  ஒழுங்கை  நிலை  நாட்டுறதா  நினச்சி  உங்களைக்  கண்டித்த   அந்த  டீச்சர்  படும்  பாட்டைப்    பாத்தீங்க்ளா?  உயிரோடு  நீங்க  பள்ளியை  வலம்  வந்தப்போ  அந்த  டீச்சர்  மேலே  கூட  அபிமானம்   வசசிருந்திருப்பீங்க.    எதி காலத்தைப்  பத்தி  என்னென  கனவு  கண்டீங்க!  தோழிகளிடம்  எத்தனை  கதை  பேசினீங்க!  எல்லாத்தையும்  ஒரு  நொடியிலெ  இடிச்சுத்  தள்ளீ ட்டீங்களே!  எங்கங்க  பாப்போம்  இனி  உங்களை?

**************************

Advertisements