பாமகவுக்கு ஒரே ஒரு சீட் கொடுத்தா போதுமாமே?

ஆமா… அன்புமணிக்கு மத்திய அமைச்சர் சீட் கொடுத்தா போதுமாம்!

———————

அதிமுக கிட்ட தேமுதிகவும் ஒரே சீட் தான் கேட்டிருக்காமே?

ஆமா… விஜய்காந்துக்கு முதல்வர் சீட் மட்டும் கொடுத்தா போதுமாம்!

——————

மக்களோட கூட்டணின்னு நம்ம தலைவர் சொன்னது தப்பாப் போச்சி…

ஏன்?

பாரு… கூட்டணியில முன்னாடி ஒம்போது தலைவர் இருந்தாங்க… இப்ப கூட்டத்துக்கே ஒன்பது பேர்தான் வந்திருக்கான்…

—————————–

கலைஞரும் விஜய்காந்தும் படத்துல எழுதியும் நடித்தும் மக்க்ளை காலி பண்றத பொறுக்காம ஜெயலலிதா அம்மா ஏதோ முடிவு எடுத்திருகாங்களாமே…

ஆமா… அவங்களும்  திரும்பவும் ஹீரோயினா நடிக்கப் போறாங்களாம்…

———————————–

நடிகர் கார்த்திக் ஏதோ போயஸ் கார்டன்ல சீட் கேட்டு கலாட்டா பண்ணாராமே?

அதுவா… அவர் அம்மாவைப் பார்க்க வெயிட் பண்ணும்போது உக்கார சேர் கூட குடுக்கலியாம்… அந்த சீட் கேட்டாராம்!

—————————————-

சரத்குமார் கூட்டணிதான் பலமான கூட்டணின்னு எப்படி சொல்ற?

அவரு கட்சியில எவ்வளவு பணம் விட்டாலும் பின்னாடி சப்போர்ட் பண்ண ராதிகா கூட பர்மனென்ட் கூட்டணி போட்டிருக்காரே!

——————————-

கம்யூனிஸ்ட் இலவச டிவிய வச்சு போன எலக்ஷனல பிரச்சாரம் பண்ணிட்டு இந்த தேர்தல்ல அதே டிவிய எதிர்க்கறாங்களே…

முன்னாடி கலைஞர் டிவி பார்திட்டிருந்தாங்க… இப்ப ஜெயா டிவி பாக்க ஆரம்பிச்சுட்டாங்களே!

—————————————

தெய்வத்தோட மட்டும்தான் கூட்டணின்னு சொன்ன தலைவர் ஏன் இப்பல்லாம் அப்படிசசொல்றதில்ல…

கடவுள் கனவுல வந்து அம்பது சீட் கேட்டாராம்.

———————————

திமுகவை பலமா எதிர்த்த நம்ம தலைவர் திடீர்னு கூட்டணி வச்சா திமுகவோடத்தான்னு சொல்றாரே…

அவரு பரம குஷ்பூ ரசிகரு ஹி ஹி

—————————————————–

Advertisements