எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் ஒரு நல்ல வேலையிலிருந்து ரிடயர் ஆனவர். மிகவும் கண்ணியமானவர். ஒருமுறை அவருடன் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பு மணிக்குப் பதிலாக, ”தோழியா…என் காதலியா..யாரடி?” என்ற பாட்டுக் கேட்டது. எனக்கு அதிர்ச்சியும் கூடவே ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரும் போனை எடுக்கவில்லை. நானும் திரும்ப முயற்சிக்காமல் விட்டு விட்டேன் அடுத்த நாள் அலுவலக கேண்டீனில் இதே பேச்சு. ” நமது பழைய எம். டி. செல்போன்ல எப்படிப்பட்ட பாட்டு வச்சிருக்காரு தெரியுமா இப்பதான் அவருக்கு இளமை திரும்பியிருக்கு.” என்று கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். அன்றே அந்த நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். இந்த விஷயத்தையும் கூறினேன். கேட்டதும் அதிர்ந்துபோன அவர் எப்படி நடந்தது எனறு புரியாமல் குழம்பினார். பிறகு நினைவு வந்தவராக வீட்டுக்கு ரெண்டு நட்களுக்கு முன்பு வந்திருந்த அவருடைய பேரன் செல்போனில் விளையாடியபடி ‘ஸ்டார்ட்’ பட்டனை அழுத்தியிருப்பான். என்று கூறினார். நான் அவரை ‘கஸ்டமர் பிரிவுக்கு போன் செய்யும்படிக் கூறியதும் உடனே அவர் போன் செய்ய ,பாட்டும் கட் ஆனது. முக்கியமா நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா ஒவ்வொருவரும் தங்கள் செல்போனை தங்கள் பாதுகாப்பில் வைத்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இதுபோல் கேலி கிண்டல் நிறைந்த அனுபவங்களைச் சந்திக்க நேரும்.

Advertisements