ரஜினி சிதம்பரத்திடமிருந்து NDTV விருதினை பெறுகிறார்

NDTVயின் சென்ற டெக்கேடின் சிறந்த என்டர்டெயினர் விருதினை ரஜினிகாந்த மத்திய அமைச்சர் சிதமபரத்திடமிருந்து புற்றுக் கொண்டார்…. இந்த விருதினை பெறுகையில் NDTVயின் நிறுவனர் பிரன்னாய் ராய் ரஜினியை பேட்டி கண்டார். அப்போது ரஜினி எந்திரன் – Robo தான் இதுவரை  தன்னுடைய மிகச் சிறந்த படம் என்று கூறினார். மேலும் அந்த பெருமை ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் ஆண்டவனுக்கும் தான் போய் சேர வேண்டும் என்று தலைவருக்கே உரிய அடக்கத்துடன் தெரிவித்தார். அரசியல் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் ரஜினி. சிதம்பரம் பேசுகையில் ரஜினி இன்று அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு உள்ள செல்வாக்கே தனிதான் என வெளிப்படையாகவே தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ கோப்பு…

ஏற்கனவே ரஜினி 2008ம் ஆண்டுக்கான NDTV வழங்கிய  “இந்தியன் ஆஃப் த இயர்” விருதினை மன்மோகன்சிங்க் கையால் வாங்கியது நினைவிருக்கலாம்.

இந்த 2010ம் வருடத்தின் சிறந்த என்டர்டெயினராக காட்ரினா கைஃப் தேர்தெடுக்கப்பட்டார்…

இந்த வருடத்தின் சிறந்த இந்தியன் விருது சச்சின் டென்டுல்கருக்கும் அஜய் தேவ்கனுக்கும், த்ரிஷாவுக்கும், வித்யா பாலனுக்கும் வழங்கப்பட்டது.

Advertisements